தெலங்கானாவில், ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி அருகே அரிசி ஆலையில் கூலி வேலை செய்துவரும் தம்பதி, வியாழக்கிழமை இரவு தங்களது 2 குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தனர். இரவு 12 மணியளவில் எழுந்து பார்த்தபோது அவர்களுடைய ஆறு வயது மகளை காணாதநிலையில், காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் ரத்த வெள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே அரிசி ஆலையில் வேலைசெய்யும் பலராம் என்ற நபர் சிறுமியை தூக்கிச்சென்றது தெரியவந்தது. சிறுமியை தூக்கிச் சென்ற பலராம், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து பலராமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
