யார் இந்த மருத்துவர் அபிநயா?
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டவர்தான் மருத்தவர் அபிநயா பொன்னிவளவன். தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் மணி வெற்றிப் பெற்றிருந்தாலும், பா.ம.க சார்பாக போட்டியிட்ட சௌமியா அன்புமணியால்தான் இந்தத் தொகுதி உற்று நோக்கப்பட்டது. இருப்பினும் 65,381 வாக்குகள் பெற்ற அபிநயா, டெபாசிட்டை பறிகொடுத்தார். 28 வயதே ஆகும் அபிநயாவின் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் பில்லூர் கிராமம். அவரின் கணவர் பொன்னிவளவன். விவசாய குடும்பம் என்றாலும், அபிநயா சிறந்த தடகள வீராங்கனையும் ஆவார். தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். ராசிபுரத்தில் இளங்கலை மருத்துவம் படித்து, மகாராஷ்டிராவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.

