போலந்தில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
9ஆவது கிராண்ட் செஸ் டூர் தொடர் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார். போலந்து நாட்டில் தற்போது 9ஆவது கிராண்ட் செஸ் டூர் தொடரின் முதல் சீசன் நடந்து வருகிறது. 5 நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்த செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் என உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க : நெருக்கடியில் களமிறங்கும் சென்னை அணி… பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ?!
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். கடும் போராட்டத்துக்கு பின் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இத்தோல்வியின் மூலம் கார்ல்சனின் புள்ளிகள் 18 ஆக குறைந்து தொடருக்கான தரவரிசையில் 2ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். சீனாவைச் சேர்ந்த Wei Yi 20.5 புள்ளிகளோடு முதலிடத்துக்கு முன்னேறினார். பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளார்.
போட்டிக்குப் பிறகு பேசிய கார்ல்சன், பிரக்ஞானந்தாவுடன் விளையாடும் போதும், பிறகும் தனது நரம்பு மண்டலம் சிதைந்தது போல உணர்வதாக குறிப்பிட்டார். கடைசி நாள் ஆட்டம் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
