வெடிவிபத்து நடந்தபோது, பலியானவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலையின் பேக்கேஜிங் பிரிவில் பணியில் இருந்தவர்கள். இது தொடா்பான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெடிவிபத்து நிகழ்ந்து 24 மணி நேரத்திற்கு பின்னர் நாக்பூர் ராம் நகரில் வசிக்கும்
வெடிபொருள் தொழிற்சாலையின் இயக்குநர் கெம்கா மற்றும் மேலாளர் தேஷ்முக் ஆகியோரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

