டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பப்புவா நியூ கினி அணியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அதே பிரிவில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்தது.
மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், சி பிரிவில், மேற்கிந்தியத்தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினி, நியூசிலாந்து, உகாண்டா அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில், தரூபா நகரில் நடைபெற்ற போட்டியில், பப்புவா நியூ கினியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி அணி, 19.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க:
இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி : கோபத்தில் கொதித்த அனுஷ்கா சர்மா – என்ன நடந்தது?
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம், சி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளன.
அதேநேரம், முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானுடனும், இரண்டாவது லீக் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளிடமும் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனால், சூப்பர் 8 வாய்ப்பை நியூசிலாந்து அணி இழந்துள்ளது.
சிறப்பான வீரர்களுடன் விளையாடியும் நியூசிலாந்து, லீக் சுற்றில் தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
