நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்தார். தற்போது, அதில் சில மாற்றங்களை அறிவித்துள்ளார். எனவே, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையும், அதில் மாற்றங்களையும் தற்போது பார்க்கலாம்.
2047க்குள் விக்சித் பாரத்
2047ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை அடைய அரசு செயல்பட்டு வருகிறது. விக்சித் பாரத் என்பது, பொருளாதாரம், சுற்றுச்சூழல், நிர்வாகம் மற்றும் சமூக முன்னேற்றம் போன்றவற்றில் தன்னிறைவு அல்லது வளர்ச்சியை குறிப்பதாகவும். எனவே, 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை இலக்காக கொண்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்காக, 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ.75,000 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சோலார் மின் திட்டம்
ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில், பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சேமிக்க முடியும் என்றும், உபரி மின்சாரத்தை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோலார் மின் உற்பத்தி மூலம் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பது, சோலார் பேனல்களின் விற்பனையாளர்களுக்கு தொழில் முனைவு வாய்ப்புகள் மற்றும் சோலார் பேனல் பராமரித்தல், உற்பத்தி செய்தல், நிறுவுதல் மூலம் தொழில்நுட்பத் திறனுடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இதையும் படிக்க:
குழந்தை திருமணத்தைத் தடுக்க ’நிஜுத் மொய்னா’ – அசாம் அரசு அதிரடி!
நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி
வாடகை வீடுகள் மற்றும் புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுடைய மக்கள் வீடு கட்டவோ, வாங்கவோ உதவும் திட்டத்தை அரசு தொடங்கும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
2024 பட்ஜெட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்காக, 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆத்மநிர்பர் எண்ணெய் விதைகள் அபியான்
நிலக்கடலை, கடுகு, சோயாபீன்ஸ், எள் மற்றும் சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை பெருக்க, ஆராய்ச்சி, மதிப்புக் கூட்டல், கொள்முதல், சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர்க் காப்பீடு ஆகியவற்றை இணைத்து, ஆத்மநிர்பர் அபியான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
பால் உற்பத்தி
பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், விரிவான திட்டங்களை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய்களை கட்டுப்படுத்துதல், பால் பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்புக்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்த நிதி வழங்குதல் உள்ளிட்டவற்றை அடக்கி செயல்படுத்தப்பட உள்ளது.
புதுமையான முயற்சிகளுக்கு நிதி
புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை கணிசமாக அதிகரிப்பதற்காக, தனியார் நிறுவனங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி வரை கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதையும் படிக்க:
அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
உயிர் உற்பத்தி திட்டம்
பசுமை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, உயிர் உற்பத்தி மற்றும் பயோ ஃபவுண்டரி என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. பயோபிளாஸ்டிக்ஸ், மக்கும் பாலித்தீன்கள், பயோ அக்ரி மற்றும் பயோ ஃபார்மாசூட்டிகல்ஸ் போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத திட்டங்களை உருவாக்குவதற்காக, கொள்கைகளை மாற்ற திட்டமிட்டுள்ளது.
நீலப் பொருளாதாரம் 2.0
காலநிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், கடலோர மீன் வளர்ப்பு மற்றும் கடல் மீன் வளர்ப்பு ஆகியவற்றிற்கான திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பிரதமர் ஆவாஸ் யோஜனா
குடும்பங்கள் அதிகரித்து வருவதால், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேலும் 2 கோடி வீடுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
தாய் மற்றும் குழந்தை சுகாதார பராமரிப்பு
அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் பணி, குழந்தை பராமரிப்பு, மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து விநியோகம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை நிர்வகிக்கவும், மிஷன் இந்திரதனுஷ் திட்டத்தை விரைவுபடுத்தவும், புதிதாக வடிவடிக்கப்பட்ட U-WIN தளத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார பாதுகாப்பு அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
பிஎம் மத்ஸ்ய சம்பதா யோஜனா
மீன் வளர்ப்பில் ஈடுபடும்போது, ஒரு ஹெக்டேரில் உற்பத்தியை 3 டன்களில் இருந்து 5 டன்களாக அதிகரிக்கவும், ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. அத்துடன், இந்த துறையில் 55 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஐந்து ஒருங்கிணைந்த நீர் பூங்காக்களை அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லக்பதி திதி
கிராமப்புற சுய உதவிக் குழுக்களை இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
