தேனி மாவட்டத்தில் அதிகளவில் நெல், வாழை, திராட்சை போன்ற விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இவைகளுக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் பெருமளவு மா விவசாயம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது.
கோடை காலத்தில் பொது மக்களுக்கு பிடித்த உணவான மாம்பழத்தை விவசாயம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் பங்கு உண்டு.
தேனி மாவட்டத்தில் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமே செந்தூரம், கள்ளாமை, இமாமஸ், அல்போன்சா, காளபாடி, பங்காள வெள்ளி, இதற நாட்டு மா வகைகள் மற்றும் வெளிநாட்டு வகை மா – வும் பயிரிடப்படுகிறது. 5 முதல் 6 மாத கால பயிரான மாம்பழ சீசன் ஏப்ரல் மே மாதங்களில் தொடங்கும். ஏப்ரல் மே மாதங்களில் மா விற்பனை அமோகமாக நடைபெறும்.
விளைச்சல் குறைவு :
தற்போது கம்பம் பகுதிகளில் மா விளைச்சல் நன்றாக இருந்தாலும், தற்போது விளைந்து இருக்கக்கூடிய அளவைக் காட்டிலும் அதிக அளவில் விளைந்திருக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். போதிய அளவு வரத்து இல்லாததால் மா சீசன் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
தற்போது ஒரு சில இடங்களில் இருந்து மட்டுமே மா விளைச்சல் நடைபெறுகிறது எனவும் , இதனால் ஒரு மாம்பழம் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை ஆகிறது என்கின்றனர்.
இமாமஸ், அல்போன்சா, போன்ற வகைகள் வெளிச் சந்தைகளில் நல்ல விலை போகக் கூடியது என்கின்றனர் விவசாயிகள். ஆனாலும் கிலோ 125 ரூபாய்க்கு விற்க கூடிய இமாமஸ் வகை மாம்பழம் 200 ரூபாய்க்கும், கிலோ 100 ரூபாய் விலை கொண்ட அல்போன்சா தற்போது 150 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
