ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது.
சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில், ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறும் நிலையில், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன.
வரும் 26-ஆம் தேதி வரை லீக் போட்டிகளும், 29-ஆம் தேதி முதல் நாக் அவுட் சுற்று போட்டிகளும், அதன் பிறகு காலிறுதி ஆட்டங்களும் நடைபெற உள்ளன.
ஜூலை 14ம் தேதி பெர்லினில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் ரூ.255 கோடி கிடைக்கும்.
உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் இதில் பங்கேற்றுள்ளதால் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)