• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எகிறி அடிக்கும் காய்கறிகள் விலை… திண்டுக்கல் வியாபாரிகள் கூறும் அதிர்ச்சி தகவல்… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 14, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
எகிறி அடிக்கும் காய்கறிகள் விலை… திண்டுக்கல் வியாபாரிகள் கூறும் அதிர்ச்சி தகவல்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழகத்தில் அதிகளவில் காய்கறி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாகக் காய்கறி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.
பொதுவாக அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் ஆனால் இந்த வருடம் கோடைக்காலத்தில் பெய்த கனமழை விவசாயத்தைப் பாதித்துள்ளது. காய்கறிகள் விளைச்சல் அதிகம் பாதிக்கப்பட்டன.

அதேபோல் வரும் நாட்களில் அடுத்தடுத்து சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் காய்கறிகள் தேவையும் அதிகரிக்கும். இந்நிலையில் திண்டுக்கல் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை திடீரென உயரத் துவங்கியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

விளம்பரம்

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காந்தி மார்க்கெட் வியாபாரி தாஸ் கூறுகையில், “பருவநிலை மாற்றத்தால் வெயில் தேவைப்படும் நேரம் மழை பெய்ததால் செடிகளிலுள்ள பூக்களும் பிஞ்சுகளும் சேதமடைந்துவிட்டன. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தியாகும் நாட்டுக் காய்கறிகளின் வரத்து குறைந்துவிட்டது.
திருநெல்வேலி, தென்காசி, மதுரை போன்ற பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 60 ரூபாய்க்கு விற்பனையான மிளகாய் தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

இதையும் வாசிக்க: சும்மா காத்துவாக்கலா சுத்தி பார்க்கலாம் – தஞ்சை டூ திருச்சி சாலையில் உருவாகி வரும் சுற்றுலா தளம்

மேலும், பள்ளி விடுதிகளுக்கும், திருமண விஷேசங்களுக்கும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தேவைக்கு ஏற்ப காய்கறிகள் வரத்து இல்லாததால் காய்கறிகளில் விலை குறைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து வரத்து குறைந்துள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆகும் போக்குவரத்து செலவுகளையும் சேர்த்து காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் 30 நாட்களுக்கு இதே போல் தான் விலைவாசி காணப்படும்” எனத் தெரிவித்தார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

T20 WC 2024: சூப்பர் 8 சுற்றில் சூப்பராக நுழைந்தது ஆப்கானிஸ்தான்.. வெளியேறியது நியூசிலாந்து!

Next Post

ஊழல்வாதிகளுக்கு எதிராக உறுதியாகச் செயல்படுங்கள் காவலர்களுக்குப் பிரதமர் உத்தரவு

Next Post
ஊழல்வாதிகளுக்கு எதிராக உறுதியாகச் செயல்படுங்கள் காவலர்களுக்குப் பிரதமர் உத்தரவு

ஊழல்வாதிகளுக்கு எதிராக உறுதியாகச் செயல்படுங்கள் காவலர்களுக்குப் பிரதமர் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin