• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை அணி? அதற்கு இவையெல்லாம் நடக்க வேண்டும்… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 14, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை அணி? அதற்கு இவையெல்லாம் நடக்க வேண்டும்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில், லீக் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

ப்ளே ஆஃபில் கொல்கத்தா

தற்போது சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே 61வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளன. நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 புள்ளிகளை பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

விளம்பரம்

2 வெற்றி அவசியம்

தரவரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது. இந்த அணி ப்ளே ஆஃப் செல்ல அதிக சிக்கல் இருக்காது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 லீக் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால், பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

விளம்பரம்

டெல்லி – லக்னோ

இதேபோன்று சென்னை அணிக்கு போட்டியாக தலா 12 புள்ளிகள் வைத்திருக்கும் டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளன. ஒரு போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ நேருக்கு நேராக மோதுகிறது. எனவே இந்த இரு அணிகளில் ஒன்று சென்னைக்கு இடையூறாக அமையலாம்.

ஆனால் மீதமுள்ள 2 போட்டிகளில் சென்னை அணி ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் அடுத்த 2 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை பெற வேண்டும். இந்த சூழலில் அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை ப்ளே ஆஃப் செல்லலாம்.

விளம்பரம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் சென்னை, டெல்லி, லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் தலா 14 புள்ளிகளை பெற்றிருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி பிளே ஆப் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

தற்போதைய சூழலில் சென்னை அணிக்கு நெட் ரன்ரேட் நன்றாக உள்ளதால் கடைசி 2 லீக் போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யலாம்.

விளம்பரம்

ஒரேயொரு போட்டியில் வெற்றி பெற்றால், லக்னோ, டெல்லி, பெங்களூரு அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

மீதமுள்ள 2 லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்தால் சென்னை அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியாது.

.

Read More

Previous Post

கங்கனாவை பெண் காவலர் தாக்கிய விவகாரம்: பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்…! | kangana slapped by CISF woman constable incident

Next Post

ஒரே செல்போன் நம்பரை பல வருஷமா வச்சிருக்கீங்களா? இனி அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்

Next Post
ஒரே செல்போன் நம்பரை பல வருஷமா வச்சிருக்கீங்களா? இனி அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்

ஒரே செல்போன் நம்பரை பல வருஷமா வச்சிருக்கீங்களா? இனி அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin