ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டி தான் சென்னையில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால், தோனியின் கடைசி போட்டியாக இது இருக்கலாம் என ரசிகர்கள் சோகத்துடன் கத்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க:
IPL 2024 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை அணி? அதற்கு இவையெல்லாம் நடக்க வேண்டும்…
இந்நிலையில், மைதானத்திற்கு வந்த அனைத்து ரசிகர்களுக்கும் சி.எஸ்.கே வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட நன்றி அட்டையை வழங்கியுள்ளது சி.எஸ்.கே நிர்வாகம்.
போட்டி முடிந்த பின்னர், ரசிகர்களை மைதானத்திலேயே காத்திருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கங்களில் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
