வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு PAN கார்டு அவசியமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? ஒரு சில சமயங்களில் வங்கியின் விதிமுறைகள் சற்று சூட்சமம் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் அவற்றை தெளிவாக புரிந்து கொள்வதன் மூலமாக நீங்கள் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
நீங்கள் செய்யக்கூடிய பணப்பரிமாற்றங்கள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
PAN நம்பர் என்றால் என்ன?
பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் என்று அழைக்கப்படும் PAN கார்டு இந்தியாவில் வருமான வரித்துறையினால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணம். எழுத்துக்கள் மற்றும் எண்கள் நிறைந்த இந்த 10 இலக்க தனித்துவமான PAN என்பது ஒவ்வொரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
இது குறிப்பாக வரி சம்பந்தப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டாலும் வேறு சில பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
பணத்தை டெபாசிட் செய்வதற்கு PAN கார்டு அவசியமா?
இந்தியாவில் உள்ள வங்கியில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து கேஷ் டெபாசிட்களுக்கும் PAN கார்டு அவசியமில்லை. எனினும் ஒரே நாளில் நீங்கள் 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் பொழுது உங்களிடம் கட்டாயமாக PAN கார்டு இருக்க வேண்டும். கூடுதலாக ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் நீங்கள் செய்யும் மொத்த கேஷ் டெபாசிட் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமானால் அப்போதும் PAN கார்டு வைத்திருப்பது கட்டாயம்.
இது உங்களுடைய வங்கி கணக்குகள் மற்றும் தபால் நிலைய கணக்குகள் ஆகிய இரண்டு கணக்குகளிலும் சேர்த்து நீங்கள் செய்யக்கூடிய அனைத்து டெபாசிட்டுகளுக்கும் பொருந்தும்.
2022 ஆம் ஆண்டில் CBDT ஏற்படுத்திய மாற்றம்
ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான டெபாசிட் அல்லது வித்ட்ராயல்களை செய்யும் தனி நபர்கள் தங்களுடைய PAN அல்லது ஆதார் நம்பரை வழங்க வேண்டும் என்ற புதிய விதியை சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்ஸ் (CBDT) 2022ஆம் ஆண்டில் வெளியிட்டது. இது வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் நீங்கள் செய்யும் அதிக மதிப்பு கொண்ட பண பரிமாற்றங்களுக்கு பொருந்தும். கூடுதலாக கரண்ட் அக்கவுண்ட் அல்லது கேஷ் கிரெடிட் அக்கவுண்டுகள் திறப்பதற்கும் இதே விதியை பின்பற்ற வேண்டும்.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளில் ஒரு நிதியாண்டில் நீங்கள் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கேஷ் டெபாசிட் அல்லது வித்ட்ராயல் செய்தால் அதற்கு PAN கார்டு அல்லது ஆதார் சமர்ப்பிப்பது கட்டாயம். இந்த 20 லட்ச ரூபாய் வரம்பு என்பது அந்த ஆண்டில் நீங்கள் செய்யும் அனைத்து டெபாசிட்டுகள் அல்லது வித்ட்ராயல்களின் மொத்த தொகை.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
ஒருவேளை இது மாதிரியான பண பரிமாற்றங்களை செய்வதற்கு நீங்கள் திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால் அந்த பண பரிமாற்றம் செய்வதற்கு 7 நாட்களுக்கு முன்பு நீங்கள் PAN கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல வங்கி அல்லது தபால் நிலையத்தில் கரண்ட் அல்லது கேஷ் கிரெடிட் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என்றாலும் கூட உங்களிடம் PAN கார்டு இருக்க வேண்டும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
