நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி, டெல்லி அணியை வீழ்த்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில். பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவுசெய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க:
ராஜஸ்தானை 5 விக். வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே. – ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் முன்னிலை
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் ரஜத் படிதார் 52 ரன்களும், வில் ஜாக்ஸ் 41 ரன்களும், கேமரூன் கிரீன் 32 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியின் கலீல் அகமது, ரசிக் சலாம் தலா 2 விக்கெட்டையும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியில் யாஷ் தயாள் 3 விக்கெட்டையும், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டையும், கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)