உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்துள்ள அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அமெரிக்க அணி தரப்பில் நிதிஷ் குமார் 27 ரன்களும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்களும், கோரி ஆண்டர்சன் 14 ரன்களும், ஹமீத் சிங் 10 ரன்களும் சேர்க்க ஷாட்லி வான் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
போட்டி நடைபெறும் நியூயார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இயல்பாகவே அதிக ரன்கள் குவிக்க முடியாது என்பதால், இந்த 111 ரன்கள் சற்று சவாலான இலக்காகவே இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று 4 புள்ளிகள் மற்றும் +1.455 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவும் 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று 0.626 நெட் ரன் ரேட்டுடன் 2 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று +0.191 ரன் ரேட்டுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க – விராட் கோலி படத்துடன் செயின் – சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆன பாகிஸ்தான் ரசிகை!
இன்றைய ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தால் முதல் அணியாக அமெரிக்கா சூப்பர் 8க்குள் நுழையும். அத்துடன் பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறும். இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், சூப்பர் 8 சுற்றை உறுதி செய்து விடும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)