திராட்சைப் பழமானது அனைவராலும் விரும்பி சாப்பிடக் கூடிய பழமாக உள்ளது. அதிலும் குழந்தைகள் திராட்சைப் பழத்தை அவ்வளவு விருப்பப்பட்டுச் சாப்பிடுகின்றனர். அனைத்துக் காலங்களிலும் கிடைக்கக் கூடியதாக உள்ள திராட்சைப் பழம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், மெட்டூர், காமலாபுரம், ஊத்துப்பட்டி, அமலிநகர், பெருமாள் கோவில்பட்டி, செட்டியபட்டி, உள்ளிட்ட பல கிராமங்கில் ஆண்டுதோறும் பன்னீர் திராட்சை சாகுபடி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இங்கு அறுவடை செய்யப்படும் திராட்சை சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நான்கு மாதத்திற்கு ஒருமுறை சாகுபடியாகும் திராட்சையானது கோடைக்காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை விளைச்சல் அமோகமாகக் காணப்படும்.
இதையும் படிங்க: சின்ன பழம் பெரிய லாபம்… ஸ்ட்ராபெர்ரி பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்…
ஆனால் இந்த வருடம் கோடைக் காலத்தில் கோடை மழை ஏற்படுத்திய பருவநிலை மாற்றத்தால் திராட்சை விவசாயிகள் வழக்கமான சாகுபடி எடுக்க முடியாமல் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து செட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த திராட்சை விவசாயி தனிக்கோடி கூறுகையில், “சிறுமலை அடிவாரத்திலுள்ள பல கிராமங்களில் பன்னீர் திராட்சை உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஒரு வருடத்தில் நான்கு மாதத்திற்கு ஒருமுறை கவாத்து வெட்டி பராமரித்து திராட்சைப் பழம் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக மழைக்காலங்களில் திராட்சையின் உற்பத்தி மிகக் குறைவாகவே காணப்படும். சென்ற வருடம் கோடைக்காலத்தின் வெயில் நன்றாக இருந்ததால் விளைச்சல் அமோகமாகக் காணப்பட்டது.
ஆனால் இந்த வருடம் கோடைக்காலத்தில் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் நஷ்டமே அடைந்தோம். மழை தேவைப்படும் நேரம் வெயிலும், வெயில் தேவைப்படும் நேரம் மழையும் பெய்ததால் முதலீடு செய்த அளவிற்கு லாபம் கிட்டவில்லை. பருவநிலை மாற்றத்தாலும், தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணத்தினால் திராட்சை சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
