காஞ்சிபுரம் தற்காலிக ராஜாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் விற்பனை குறைந்துள்ளதாக வியாபரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்த காரணத்தினால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தற்காலிக ராஜாஜி மார்க்கெட் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரத்தை இங்கு பார்க்கலாம்.
ஒரு கிலோ தக்காளி 20 ரூபாயிலிருந்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 50 ரூபாயிலிருந்து 65 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 35 ரூபாயிலிருந்து 45 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. மேலும் உருளைக்கிழங்கு 50 ரூபாயிலிருந்து அறுபது ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கும், பூண்டு 300 முதல் 450 ரூபாய் வரை உயர்ந்துள்ளது அறுபது ரூபாயில் இருந்த கேரட் தற்போது சற்று உயர்ந்து 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 20 ரூபாயில் இருந்த தேங்காய் தற்போது 24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் காய்கறிகளின் வரத்து குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
