சிம்லா: ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னாள் அமைச்சரும், தர்மசாலாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவுமான சுதிர் சர்மா முதலில் பதவியேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ அனுராதா ராணா பதவியேற்றார்.
சுஜான்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏ கேப்டன் ரஞ்சித் சிங், பார்சார் தொகுதியின் பாஜக எம்எல்ஏ இந்தர் தத் லக்கன்பால், காக்ரெட்டின் காங்கிரஸ் எம்எல்ஏ ராகேஷ் கலியா மற்றும் குட்லேஹரின் காங்கிரஸ் எம்எல்ஏ விவேக் சர்மா ஆகியோர் பதவியேற்றனர்.
புதிய எம்எம்ஏக்களுக்கு அவைத்தலைவர் குல்தீப் சிங் பதானியா வாழ்த்து தெரிவித்தார். மாநிலம் மற்றும் மக்கள் நலன் தொடர்பான பிரச்னைகளை சட்டப்பேரவையில் எழுப்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
6 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் நான்கில் காங்கிரஸும், இரண்டு இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றனர். கடந்த ஜூன் 1-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
ஆறு புதிய எம்எல்ஏக்களில் மூன்று பேர் சிங் (சுஜன்பூர்), ஷர்மா (குட்லேஹர்) மற்றும் ராணா (லாஹவுல் மற்றும் ஸ்பிதி) ஆகியோர் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

