• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Sirumalai Hill Banana: சிறப்பு வாய்ந்த சிறுமலை வாழை… விலை உயர்ந்தாலும் மகிழ்ச்சியளிக்காதது ஏன்..?

GenevaTimes by GenevaTimes
June 12, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Sirumalai Hill Banana: சிறப்பு வாய்ந்த சிறுமலை வாழை… விலை உயர்ந்தாலும் மகிழ்ச்சியளிக்காதது ஏன்..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாட்டின் மத்தியில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் தொழில் வளத்தில் மட்டும் அல்லாமல் வேளாண்மையிலும் முக்கியமான மாவட்டமாகத் திகழ்கிறது. இங்குள்ள சிறுமலை பகுதி சிறந்த சுற்றுலாத் தலமாகவும், விவசாயத்தில் முக்கியமான பகுதியாகவும் விளங்குகிறது.

சிறுமலை அடிவாரத்திலுள்ள கிராமங்களில் காணப்படும் சிறப்பான இயற்கை வளம் காரணமாக இப்பகுதியில் பலா, வாழை, எழுமிச்சைப் போன்ற பழ வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிலும் சிறுமலை வாழைப்பழத்திற்கு என தனி மவுசு உள்ளது.

நீர்ச்சத்து குறைவானதாகவும் அதிக சுவை கொண்டதாகவும் விளங்கும் சிறுமலை வாழைப்பழம் பழனி பஞ்சாமிர்தத்தில் முக்கிய பொருளாக உள்ளது. மேலும் சிறுமலை மலை வாழைப்பழத்தின் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் அதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளும், கடந்து செல்லும் பயணிகளும் தவறாமல் சிறுமலை வாழைப்பழத்தை வாங்கிச் செல்ல வேண்டும் என விரும்பும் அளவிற்குச் சிறுமலை வாழைப்பழம் புகழ்பெற்றதாகும்.

விளம்பரம்

இதையும் படிங்க: சுற்றுலாத் தலமான வரலாற்று சின்னம்… திண்டுக்கல் மலைக்கோட்டையின் சிறப்பம்சங்கள்…

இவ்வாறு சிறப்பு வாய்ந்த வாழைப்பழம் சிறுமலை பகுதியிலிருந்து கொண்டுவந்து திண்டுக்கல் நகர்ப்பகுதியில் உள்ள சிறுமலை சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. சிறுமலை சந்தையில் வாழைக்காய் மண்டி நடத்தி வரும் மணிவண்ணன், வாழைப்பழம் வியாபாரி ஹகிம்சேட் இதுகுறித்து கூறுகையில், “வாரத்திற்குத் திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் வாழைப்பழமானது ஏலத்திற்கு வரும் இந்த வருடத்தில் மழை பொழிவின் போது காற்று அதிகமாக அடித்ததால் வாழைமரம் ஒடிந்து விழுந்து வரத்து குறைந்துவிட்டது.

விளம்பரம்

இதனால் 200 முதல் 400 ரூபாய் வரை விற்பனையான கற்ப்பூரவள்ளி தாரானது தற்போது 500 முதல் 700 வரை விற்பனையாகிறது. 800 முதல் 1000 ரூபாய்க்கு விற்பனையான செவ்வாழை தாரானது தற்போது ரூ.1500 முதல் 1600 வரை விற்பனையாகிறது. 3500 ரூபாய்க்கு விற்பனையான சிறுமலை பழமும் தற்போது ரூ.5500 வரை விற்பனையாகிறது. விலை ஏற்றம் ஒரு பக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் வரத்து குறைந்தது வருத்தத்தை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

பொதுவாகச் சிறுமலை மலை வாழைப்பழத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்தச் சிறுமலை மலை வாழைப்பழமானது இயற்கையான மழை நீரில் வளர்கிறது. அதனால் இயற்கையாகவே இது சுவை மிகுந்த பழமாகக் காணப்படுகிறது. இந்த மலை வாழைப்பழத்தில் விதைகள் இருக்காது. மேலும், மருத்துவ குணம் அதிகம் வாய்ந்தவை. இந்த மலை வாழையானது தாராக ஏலம் விடுவதில்லை சீப்சீப்பாக வெட்டி தான் ஏலம் விடுவார்கள். தற்போது மலை வாழைப்பழத்திற்கு நல்ல விலை கிடைத்தாலும் வரத்து குறைந்துள்ளது விவசாயிகள், வியாபாரிகளை கவலையடையச் செய்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

ஷிவம் துபேக்கு பதிலாக இந்திய அணியில் முக்கிய மாற்றம்? வானிலை, பிட்ச் ரிப்போர்ட் என்ன? – News18 தமிழ்

Next Post

BMW langgar lori rosak – 4 maut | Makkal Osai

Next Post
BMW langgar lori rosak – 4 maut | Makkal Osai

BMW langgar lori rosak - 4 maut | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin