• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஷிவம் துபேக்கு பதிலாக இந்திய அணியில் முக்கிய மாற்றம்? வானிலை, பிட்ச் ரிப்போர்ட் என்ன? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 12, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஷிவம் துபேக்கு பதிலாக இந்திய அணியில் முக்கிய மாற்றம்? வானிலை, பிட்ச் ரிப்போர்ட் என்ன? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக் கோப்பை தொடரில் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் இன்று முதன்முறையாக மோதவுள்ளன. நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இன்று (ஜூன் 12) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, மழையால் போட்டி லேசாக பாதிக்கப்பட்டது. அதுபோல, இன்றைய போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இருப்பினும், போட்டி நடக்கும் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காற்றின் ஈரப்பதம் 50%ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதால், இரு அணிகளும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், நியூயார்க் பிட்ச் ரன் குவிப்பதற்கு ஏதுவானதாக இல்லை என்பது கடந்த சில போட்டிகளில் தெரிந்துவிட்டது. இந்த மைதானத்தில் 20 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்தாலே பெரிய ஸ்கோர் என்ற நிலையில், இதுதான் இந்திய அணிக்கு பெரிய கவலையை கொடுக்கக் கூடியது.

விளம்பரம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தாலும், பந்துவீச்சில் மிரட்டி, பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, அமெரிக்காவை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. எனவே, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன், நன்கு அனுபவப்பட்ட பிட்ச் என்பதால், அமெரிக்காவின் கை ஓங்க வாய்ப்புள்ளது. அத்துடன், பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகளையும் வீழ்த்தி நம்பிக்கையுடன் இருக்கும் அமெரிக்கா, இந்திய அணியையும் வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

Also Read :
சீக்கியர்கள் குறித்த அவதூறான பேச்சு… பகிரங்க மன்னிப்பு கேட்ட பாக். முன்னாள் வீரர்

விளம்பரம்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பெரிய அணிகளை சிறிய அணிகள் வீழ்த்தி வருவதால், இன்றைய போட்டியில் இந்தியா மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதேபோல், அமெரிக்கா வென்றால், அந்த அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், யஷஸ்வி ஜெயஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

விளம்பரம்

மோனாங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணியில், ஆரோன் ஜோன்ஸ், ஆண்ட்ரீஸ் கவுஸ், கோரி ஆண்டர்சன், அலிகான், ஸ்டீவன் டெய்லர், நிதிஷ்குமார், ஹர்மீத் சிங், நோஷ்துஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரால்வாகர், ஜெஸ்ஸி சிங் உள்ளிட்டோர் இடம்பிடிப்பர்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வைத்துள்ளது. எனவே, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடா ஆகிய தொலைக்காட்சிகளில் நேரலையில் பார்க்கலாம். அத்துடன் Disney+ Hotstar மொபைல் ஆப்பிலும் இந்தியா – அமெரிக்கா போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

விளம்பரம்

.

Read More

Previous Post

டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜய பிராபகர் – News18 தமிழ்

Next Post

Sirumalai Hill Banana: சிறப்பு வாய்ந்த சிறுமலை வாழை… விலை உயர்ந்தாலும் மகிழ்ச்சியளிக்காதது ஏன்..?

Next Post
Sirumalai Hill Banana: சிறப்பு வாய்ந்த சிறுமலை வாழை… விலை உயர்ந்தாலும் மகிழ்ச்சியளிக்காதது ஏன்..?

Sirumalai Hill Banana: சிறப்பு வாய்ந்த சிறுமலை வாழை... விலை உயர்ந்தாலும் மகிழ்ச்சியளிக்காதது ஏன்..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin