தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து நேற்றுக் காலை முதல், ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. லொகொமோட்டிவ் ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையிலான பேச்சுவார்த்தையின்போது இதற்கு தீர்வு காணப்பட்டது. பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த (06) முதல் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், ரயில் பொது முகாமையாளர் எழுத்துமூலமாக வழங்கிய உறுதிமொழிக்கமைய தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதன்படி நேற்றுக் காலை முதல் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
&w=1200&resize=1200,675&ssl=1)