விமான விபத்தில் சிக்கி மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் மலாவி நாடு அமைத்துள்ளது. இதன் துணை அதிபராக இருந்தவர் சவ்லோஸ் சிலிமா. இவர் தனது மனைவி உள்பட 9 பேருடன் ராணுவ விமானத்தில் தலைநகர் லிலோங்வேயில் இருந்து, வடக்கு பகுதியில் அமைந்துள்ள முசுசு என்ற இடத்திற்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
இந்த இடம் தலைநகரில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்க இருந்த விமானம் நீண்ட நேரம் ஆகியும் தரையிறங்காமல் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் விபத்திற்குள்ளானதா என்பது குறித்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்த தொடங்கினர். இந்நிலையில் துணை அதிபர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாகவும், இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாகவும் இன்று அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க – விராட் கோலி படத்துடன் செயின் – சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆன பாகிஸ்தான் ரசிகை!
போதிய வெளிச்சம் இல்லாததால் விமானம் விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் துணை அதிபர் சவ்ரோஸ் சிலிமா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தார். அவரது உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமான விபத்து குறித்து மலாவி நாட்டின் அதிபர் லாசரஸ் சக்வேரா கூறுகையில், ‘’துணை அதிபர் உயிரிழந்த நிகழ்வு எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இந்த சோக சம்பவம் நடந்ததற்காக நாட்டு மக்கள் வருத்தத்தில் உள்ளனர். ஒரு மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போது அங்கே சிதிலம் அடைந்த விமானத்தின் பாகங்கள் கிடைத்தன.
உயிருடன் யாரும் மீட்கப்படவில்லை. துணை அதிபர் சென்ற விமானத்தை இயக்கியவர்கள் மிகுந்த அனுபவம் உடையவர்கள். இருப்பினும் ஏதோ ஒன்று விமானத்தில் தவறுதலாக ஏற்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
