பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் மோடி உள்பட 72 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், வாரிசு அரசியல் பற்றி விமர்சித்த பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“கட்சிக்காக உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்களுக்கு பதவி வழங்கியதையே வாரிசு அரசியல் என்று விமர்சித்த மோடியின் அமைச்சரவையில் வாரிசுகள் நிரம்பியுள்ளன. அவரின் பேச்சுக்கும், செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

