இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்காக, EPFO மூலம் வருங்கால வைப்பு நிதி திட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படும் தொகை, அந்த ஊழியர் ஓய்வுபெறும்போது, ஒட்டுமொத்தமாக வழங்கப்படுகிறது. ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12% தொகை EPF கணக்கில் செலுத்தப்படுகிறது. இதே தொகையை, அந்த நிறுவனம் அல்லது ஊழியரின் முதலாளியும் செலுத்துகிறார். இதில், நிறுவனத்தின் தரப்பில் இருந்து குறைந்தபட்சம் ரூ.1,800 செலுத்த வேண்டும். இவ்வாறு ஊழியரின் சம்பளத்தில் இருந்து பங்களிக்கப்படும் 12%ல், 8.33% ஊழியரின் EPF கணக்கிற்கும், 3.67% ஊழியரின் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) செல்கிறது.
EPF கணக்கில் செலுத்தும் தொகை உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருவாய்த் திட்டத்தின் கீழ் வருவதால், ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வட்டி மற்றும் முதிர்வு தொகைக்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு.
EPF இருப்பு மற்றும் வட்டியை சரிபார்ப்பது எப்படி?
EPF கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதை, ஆன்லைனில் சரிபார்க்கலாம். குறிப்பாக, உமாங்க் ஆப், EPFO போர்டல் அல்லது மொபைலில் இருந்து எஸ்.எம்.எஸ். மூலம் பார்க்க முடியும். www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் மூலம் EPFO போர்டலுக்கு செல்லலாம்.
அதில், E-PassBook விருப்பத்தை க்ளிக் செய்து, UAN எண், கடவுச் சொல் மற்றும் கேப்சா ஆகியவற்றை உள்ளீடு செய்து உள்ளே நுழைய வேண்டும். பின்னர், பாஸ்புக் என்ற ஆப்சனை தேர்வு செய்து, அதில், பாஸ்புக்கை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://passbook.epfindia.gov.in/ என்ற லிங்கில் நேரடியாக பாஸ்புக் பக்கத்திற்கு செல்லாம்.
தற்போது EPF பங்களிப்புக்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. எனவே, ரூ.5 லட்சம் பங்களிப்பு செய்தால், அதற்கு ரூ.41,250 வட்டி கிடைக்கும். எனவே, முதிர்வுத் தொகையாக, ரூ.5,41,250ஆக இருக்கும்.
பங்களிப்பு ரூ.10 லட்சமாக இருந்தால், மொத்த வட்டியாக ரூ.82,500 கிடைக்கும். எனவே, முதிர்வின்போது, ரூ.10,82,500 கிடைக்கும். பங்களிப்பு ரூ.15 லட்சமாக இருந்தால், மொத்த வட்டியாக ரூ.1,23,750 கிடைப்பதோடு, முதிர்வு தொகையாக ரூ.16,23,750 கிடைக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)