சென்னை அணிக்கு எதிரான போட்டியிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய ஆட்டக்காரர் விலகியுள்ளார். இதனால் பெங்களூர் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற சென்னை, பெங்களூர், ஹைதராபாத், லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது.
ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை அணி 14 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், ஹைதராபாத் நான்காம் இடத்திலும், பெங்களூரு ஐந்தாம் இடத்திலும் உள்ளன. வரும் 18ஆம் தேதி அன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் தோல்வியடையும் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் குறையும். ஏறக்குறைய இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்று அமைய உள்ளது. இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயார் ஆகுவதற்காக, பெங்களூரு அணியின் முக்கிய ஆட்டக்காரர் வில் ஜேக்ஸ் தனது தாய் நாடான இங்கிலாந்துக்கு திரும்பி உள்ளார்.
இதையும் படிங்க – Watch : இஷாந்த் சர்மாவை பழிதீர்த்த விராட் கோலி.. மைதானத்தில் சுவாரஸ்ய சம்பவம்
கடந்த சில போட்டிகளாக தனது அதிரடி பேட்டிங் மூலம் பெங்களூரு அணிக்கு வில் ஜேக்ஸ் வெற்றிகளை தேடி தந்தார். இந்த நிலையில் அவர் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
