இதேபோல, ஒருவரின் தற்போதைய அடிப்படை பென்ஷன் ரூ.30,000 ஆக இருந்தால், 2.5 ஃபிட்மென்ட் ஃபேக்டரில் அது ரூ.75,000 ஆக மாறும். 3 ஃபிட்மென்ட் ஃபேக்டரில் ரூ.90,000 ஆகவும், 3.5-ல் ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாகவும் உயரலாம். அதேசமயம், ரூ.40,000 அடிப்படை பென்ஷன் வாங்குபவர்களுக்கு 2.5 ஃபிட்மென்ட் ஃபேக்டரில் ரூ.1 லட்சமும், 3-ல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், 3.5-ல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

