• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க இடைத்தேர்தல்: டிரம்புக்கு காத்திருக்கும் அரசியல் பின்னடைவு? ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகக் கருத்துக்கணிப்புகள் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க இடைத்தேர்தல்: டிரம்புக்கு காத்திருக்கும் அரசியல் பின்னடைவு? ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகக் கருத்துக்கணிப்புகள் | World News (உலக செய்திகள்)
Share on FacebookShare on Twitter


Last Updated:Nov 03, 2026 9:47 PM IST

டெக்சாஸ் மகாணத்தில் குடியரசுக் கட்சியின் கென் பாக்சனை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் தாலாரிகோ 7 புள்ளிகள் முன்னிலையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கான தேர்தல் முடிவு அதிபர் டிரம்புக்கு பின்னடைவாக அமையும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையின் 435 தொகுதிகளுக்கும், மேலவையான செனட்டில் காலியாக உள்ள 35 இடங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் 36 மாநிலங்களில் ஆளுநர்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. அதிபர் டிரம்பின் ஆட்சி நிர்வாகத்திற்கு மதிப்பீடாக இந்த தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவான அலை வீசுவதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 435 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபை மற்றும் 100 இடங்களைக் கொண்ட செனட் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெறக்கூடும் என கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜார்ஜியா, வட கரோலினா, நியூயார்க், பென்சில்வேனியா மட்டுமின்றி, அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியின் கோட்டைகளான கேன்சாஸ், ஐயோவா, டெக்சாஸ் மற்றும் ஓகியோ ஆகிய மாகாணங்களிலும் கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக கேன்சாஸில் 1930 ஆம் ஆண்டுக்குப் பின் ஜனநாயகக் கட்சி வென்றதில்லை என்ற சூழலில், தற்போது அக்கட்சியின் வேட்பாளர் ஆடம் ஹேமில்டன் 5 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஐயோவாவிலும் ஜனநாயகக் கட்சியின் ஜோஷ் டுரெக் கடும் போட்டியை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

டெக்சாஸ் மகாணத்தில் குடியரசுக் கட்சியின் கென் பாக்சனை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் தாலாரிகோ 7 புள்ளிகள் முன்னிலையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பணவீக்கம் மற்றும் பொருளாதார சிக்கல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவு அதிபர் டிரம்பின் அரசியல் எதிர்காலத்தையும் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டையும் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

Read More

Previous Post

சத்தமில்லாமல் சாதித்த டாடா மோட்டார்ஸ்.. உலகத்திலேயே 4வது பெரிய நிறுவனம்! | Tata Motors Becomes World’s 4th Largest Commercial Vehicle Giant After €3.43B Iveco Group Acquisition

Next Post

ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) ஏன் இன்னும் அகதிகளைப் பதிவு செய்கிறது? -ராட்ஸி கேள்வி  | Makkal Osai

Next Post
ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) ஏன் இன்னும் அகதிகளைப் பதிவு செய்கிறது? -ராட்ஸி கேள்வி  | Makkal Osai

ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) ஏன் இன்னும் அகதிகளைப் பதிவு செய்கிறது? -ராட்ஸி கேள்வி  | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin