• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜெர்மனிக்கு பறந்த அமைச்சர் கீர்த்தனா.. Zollner நிறுவனத்துடன் முக்கிய ஆலோனை! | Tamil Nadu Investment Shift: 3 Auto Giants Move to Andhra While Minister Keerthana Courts Germany for Electronics Hub

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜெர்மனிக்கு பறந்த அமைச்சர் கீர்த்தனா.. Zollner நிறுவனத்துடன் முக்கிய ஆலோனை! | Tamil Nadu Investment Shift: 3 Auto Giants Move to Andhra While Minister Keerthana Courts Germany for Electronics Hub
Share on FacebookShare on Twitter


ஜெர்மனிக்கு பறந்த அமைச்சர் கீர்த்தனா.. Zollner நிறுவனத்துடன் முக்கிய ஆலோனை!

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுள்ளது பேசுபொருளாகியிருக்கும் வேளையிலும், ஜிஎஸ்டி வரி வசூல் தமிழ்நாடு வெறும் 3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்ததுள்ளது, இந்தியாவிலேயே அதிக பணவீக்கம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது மூலம் முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் நிர்வாகத் திறன் மீது அடுத்தடுத்து கேள்வி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சரான கீர்த்தனா, முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல் முறையாக ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

ஜெர்மனிக்கு பறந்த அமைச்சர் கீர்த்தனா.. Zollner நிறுவனத்துடன் முக்கிய ஆலோனை!

சமீபத்தில் தென்கொரிய கார் நிறுவனங்களான ஹூண்டாய், கியா வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்து சப்ளை செய்யும் அதன் முக்கிய சப்ளையர்களான Hwashin, Seoyon, Iwamet ஆகிய 3 தென்கொரிய நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்நாட்டை விடுத்து ஆந்திர மாநிலத்தில் தனது தொழிற்சாலை அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது சர்ச்சையான நிலையில் தற்போது ஜெர்மனி பயணத்தில் முக்கிய முதலீட்டு ஈர்க்கும் திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளார் அமைச்சர் கீர்த்தனா.

நேற்று இரவு அமைச்சர் கீர்த்தனா தனது டிவிட்டர் பதிவில் முனிச் நகரில் Zollner Elektronik AG மற்றும் Avalon Technologies ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் திட்டமிட்டுள்ள அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திட்டம் குறித்து ஆலோசனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் நடந்த முதலீட்டாளர்கள் ஈர்ப்பு கூட்டத்தில் விஜய் தலைமையிலான அரசு Avalon Technologies உடன் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது இந்த நிறுவனத்திற்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் வேளையில், அவலான் டெக்னாலஜி ஐரோப்பாவின் மிகப்பெரிய EMS நிறுவனமான Zollner Elektronik AG உடன் இணைந்து தனது உற்பத்தி திட்டத்தைச் செயல்படுத்துகிறது என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

முனிச் நகரில் நடக்கும் இந்த சந்திப்பில் இக்கூட்டணி நிறுவனங்களின் திட்டம், விரிவாக்கச் செயல்பாடுகள் ஆகியவற்றைக் குறித்து செய்துள்ளதாகவும், இக்கூட்டத்தில் இரு நிறுவனத்தில் இருந்தும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார் அமைச்சர் கீர்த்தனா. மேலும் இந்த சந்திப்பின் புகைப்படத்தையும் அமைச்சர் பகிர்ந்தார்.

இந்த ஜெர்மனி பயணத்தில் உற்பத்தி சார்ந்த முதலீடுகளையும், கூட்டணிகளை மட்டும் அல்லாமல் R&D சென்டர், தொழில்நுட்ப பார்ட்னர், தொழிற்துறை – கல்வியியல் கூட்டணிகளிலும் கவனம் செலுத்த உள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

Share This Article

English summary

Tamil Nadu Investment Shift: 3 Auto Giants Move to Andhra While Minister Keerthana Courts Germany for Electronics Hub

Tamil Nadu Investment Shift: 3 Auto Giants Move to Andhra While Minister Keerthana Courts Germany for Electronics Hub — ஜெர்மனிக்கு பறந்த அமைச்சர் கீர்த்தனா.. Zollner நிறுவனத்துடன் முக்கிய ஆலோனை!

Story first published: Tuesday, November 3, 2026, 11:03 [IST]

Other articles published on Nov 3, 2026

Read More

Previous Post

அந்தரத்தில் மோதிக்கொண்ட 2 ஹெலிகாப்டர்கள்.. சல்லி சல்லியாக நொறுங்கியதில் இந்தியர் பலி – ஷாக் வீடியோ | 2 helicopters crash into earch other in Nepal

Next Post

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய பாதுகாப்பு குறித்த மூடிய அறை விளக்கமளிக்க பிரதமர் முன்மொழிவு | Makkal Osai

Next Post

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய பாதுகாப்பு குறித்த மூடிய அறை விளக்கமளிக்க பிரதமர் முன்மொழிவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin