30 லட்சம் சேமிப்பது எப்படி? – வழக்கமாக பிடித்தம் PF தொகையை தாண்டி, தொழிலாளர்கள் தங்களின் விருப்பப்படி விருப்ப வருங்கால வைப்பு நிதி மூலம் கூடுதல் தொகையை முதலீடு செய்ய முடியும். உதாரணமாக, ஒரு ஊழியர் மாதம் ரூ.5,000 வீதம் விருப்ப வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வந்தால், வருடத்திற்கு 60,000 சேமிக்க முடியும். அதுவே, 20 ஆண்டுகளில் ஊழியர் செலுத்தும் மொத்த அசல் தொகை ரூ. 12 லட்சமாக இருக்கும்.

