Last Updated:
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இதேபோன்ற சைபர் தாக்குதலில் பிரான்ஸில் உள்ள 700 சூப்பர் மார்க்கெட்டுகள் பாதித்து, பல கோடி ரூபாய் மதிப்பில் இழப்பை ஏற்படுத்தியது. நவம்பர் மாதமும் இது தொடர்ந்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் 7 முக்கிய நாடுகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் பல முன்னணி நிறுவனங்களின் சூப்பர் மார்க்கெட்டுகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் இணைய வசதியுடன் கூடிய குளிரூட்டிகள் மூலம் பால், இறைச்சி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையில், பெல்ஜியம், ஸ்வீடன், அயர்லாந்து, நெதர்லாந்து, பின்லாந்து, லக்சம்பர்க், எஸ்டோனியா ஆகிய 7 ஐரோப்பிய நாடுகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
European supermarket fridges are under cyberattack once again, with stores across a vast swathe of the continent from Sweden to Belgium hit by a hack that turned up their temperatures, echoing an incident in France just last month https://t.co/c45bI15odE https://t.co/bvQO1GUh99
— Reuters (@Reuters) November 2, 2026
அதன்படி, ஹேக்கர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிரூட்டும் அமைப்புகளை இணையம் வழியாக ஹேக் செய்து, அவற்றின் வெப்பநிலையை திடீரென கடுமையாக உயர்த்தியுள்ளனர். வெப்பநிலை திடீரென 122 பாரன்ஹீட் வரை உயர்ந்ததால் பால், இறைச்சி மற்றும் உறைவிக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப்போயின. இதனால் டன் கணக்கிலான உணவுப் பொருட்களை குப்பையில் கொட்ட வேண்டிய கட்டாயத்திற்கு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் தள்ளப்பட்டது.

