• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – பும்ரா குறித்து ரோகித் சொன்ன ஒற்றை வார்த்தை! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 11, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – பும்ரா குறித்து ரோகித் சொன்ன ஒற்றை வார்த்தை! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், ஆட்டநாயகன் பும்ரா குறித்து, கேப்டன் ரோகித் சர்மா கூறிய வார்த்தை, சமூகவலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று, நியூயார்க்கில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தொடக்க வீரர் விராட் கோலி வெறும் 4 ரன்களில் அவுட்டான நிலையில், மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விளம்பரம்

அதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் தான், சற்று பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரிஷப் பந்த் 42 ரன்களிலும், அக்‌ஷர் படேல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால், 19 ஓவரிலேயே இந்திய அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், பாகிஸ்தான் எளிதில் வெற்றிபெறும் என ரசிகர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டனர்.

இதையும் படிக்க:
பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி..

விளம்பரம்

அதற்கு தகுந்தாற்போலவே, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான மொகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் ஆசம் ஆகியோர் வந்தவுடன் அதிரடியாக விளையாடினர். இருப்பினும், 5வது ஓவரை வீசிய பும்ரா, பாபர் ஆசமை வீழ்த்தினார். ஆனாலும், பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக விளையாடியதால், 10வது ஓவர் வரை 2வது விக்கெட் விழவில்லை. இதையடுத்து, 11வது ஓவரை வீசிய அக்‌ஷர் படேல், உஸ்மான் கானை வீழ்த்தினார். அப்போது வரை, பாகிஸ்தான் வெல்லும் என்றே ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

விளம்பரம்

ஆனால், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோரின் பந்து வீச்சுகளில் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், பந்து வீச வந்த அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே இமாத் வாசிமை வெளியேற்றினார். இருப்பினும் அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. ஆனாலும், வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

இதைத் தொடர்ந்து பேட்டியளித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, “நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. ஆனாலும், 119 ரன்களுக்கு ஆல் அவுட்டான நம்மால், பாகிஸ்தானை அதற்குள்ளாகவே சுருட்ட முடியும் என்று கூறினேன். இது போன்ற பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம். கடந்த போட்டியை விட, இந்த பிட்ச் உண்மையாகவே நன்றாக இருந்தது. அதில், தன்னம்பிக்கை கொண்ட எங்களது பவுலிங் வரிசை சிறப்பாக செயல்பட்டதால் வெற்றிபெற்றோம்” என்று ரோகித் சர்மா கூறினார்.

விளம்பரம்

மேலும், பும்ரா தனது பலத்தை வைத்து, தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவரைப் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும், அவர் இதே மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அவர் ஜீனியஸ். ரசிகர்களும் நாங்கள் விளையாடும்போதெல்லாம், எங்களை ஏமாற்றுவதில்லை. இது ஆரம்பம் மட்டுமே, இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

.

Read More

Previous Post

ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு: துணை முதல்வராகிறார் பவன் கல்யாண் | Chandrababu will take office as Andhra Pradesh CM tomorrow

Next Post

ஆழ்கடலில் ஏலியன் உருவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினம்.. அதிர்ந்துபோன ஆய்வாளர்கள் | Makkal Osai

Next Post
ஆழ்கடலில் ஏலியன் உருவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினம்.. அதிர்ந்துபோன ஆய்வாளர்கள் | Makkal Osai

ஆழ்கடலில் ஏலியன் உருவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினம்.. அதிர்ந்துபோன ஆய்வாளர்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin