Last Updated:
ஆந்திராவில் 13 மாநகராட்சிகள், 79 நகராட்சிகள் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் மேயர்கள், தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆந்திராவில் நகராட்சித் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் 13 மாநகராட்சிகள், 79 நகராட்சிகள் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் மேயர்கள், தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த ஊரான புலிவெந்துலாவில் ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்களிடையே பயங்கரக் கல்வீச்சு மற்றும் வாகனங்கள் தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறின.
தேர்தலில் வாக்களிப்பதற்காக பெங்களூருவிலிருந்து புலிவெந்துலா புறப்பட்ட ஜெகன் மோகனின் ஹெலிகாப்டர் தரையிறங்க கடைசி நிமிடத்தில் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனால் வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஆளும் அரசின் அராஜகத்தைக் கண்டித்து ஜெகன்மோகன் ரெட்டி வாக்களிப்பதைப் புறக்கணிப்பதாக அறிவித்தார்.
தொடர்ந்து புலிவெந்துலாவில் உள்ள தேர்தல் அதிகாரியைச் சந்தித்த அவர், நகராட்சித் தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி புகார் மனு அளித்தார். பின்னர், தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பாகவே தர்ணாவில் ஈடுபட்டார்.


