கல்கிசை, சொய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காணவும், அவரைக் கைது செய்யவும் இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 20, 2026 அன்று இந்த உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கல்கிசை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிரிவி காட்சி
இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சிசிரிவி (CCTV) காட்சிகளையும் புகைப்படங்களையும் காவல்துறை தற்போது ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பின்வரும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
கல்கிசை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி (OIC): 071-8591661
கல்கிசை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி (OIC): 071-8596408
சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்கி, விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


