• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பிரமாண்ட பேரணி; ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்பு… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பிரமாண்ட பேரணி; ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்பு… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி, ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் முறைகேடுகள் செய்ததாக தெரிவித்து எதிர்க்கட்சியினர் அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லியில் பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணி ராம்லீலா மைதானத்தை நோக்கிச் செல்கின்றன.

இந்தப் பேரணியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மக்களவை உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பேரணிக்காக இன்று காலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில், டெல்லி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மேலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மத்திய டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை டெல்லி போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மின்டோ சாலைக்கு வருவதற்கு முன்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

“இங்கே பேரணிக்கு வரும்போது, ​​மக்கள் பொருட்களை வாங்க வேண்டும், ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், கன்னாட் பிளேஸிற்கு வந்தபோது, ​​பாஜக ஒவ்வொரு கடையையும் கட்டாயப்படுத்தி மூடியிருப்பதைக் கண்டோம். எனவே, வணிகர்களுக்கு யார் இழப்பை ஏற்படுத்துகிறார்கள், அது எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அதில் பதிவிட்டு இருந்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். நாட்டில் யார் வாக்களிக்க வேண்டும் என்பதை நரேந்திர மோடியே தீர்மானிக்கிறார். மராட்டிய, பீகார், உத்தரப் பிரதேசத்தில் வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைத்துள்ளது என குற்றம்சாட்டினார்.



Read More

Previous Post

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Next Post

கல்கிசை துப்பாக்கிச்சூடு! சந்தேகநபரை கைது செய்ய உதவி கோரும் காவல்துறை

Next Post
கல்கிசை துப்பாக்கிச்சூடு! சந்தேகநபரை கைது செய்ய உதவி கோரும் காவல்துறை

கல்கிசை துப்பாக்கிச்சூடு! சந்தேகநபரை கைது செய்ய உதவி கோரும் காவல்துறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin