• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் நிலங்களை பாதுகாக்க உடனடி கோரிக்கை: போராட்டத்துக்கு வலு சேர்க்கும் தென்னிலங்கை தரப்புக்கள்

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் நிலங்களை பாதுகாக்க உடனடி கோரிக்கை: போராட்டத்துக்கு வலு சேர்க்கும் தென்னிலங்கை தரப்புக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு மாதவனை மற்றும் மயிலத்தமடு புல்மேடு பகுதிகளை நம்பி வாழும் கால்நடை வளர்ப்பு பால்நிலை விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மதத் தலைவர்கள் தங்களது கடுமையான கவலைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

அது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இப்பகுதி புல்மேடுகள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை வளர்ப்பிற்கும், அப்பகுதி மக்களின் உணவுத் தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய நிலங்களாகும்.

எனினும், சமீபகாலமாக இந்த நிலங்கள் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இந்த நிலங்கள் மறுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

நியாயமான கோரிக்கை


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பௌத்த துறவி ஒருவர், “தற்போதைய அரசு தங்களை ஒரு மக்களுக்கான அரசாங்கம் என்று கூறிக்கொள்கிறது.

தமிழர் நிலங்களை பாதுகாக்க உடனடி கோரிக்கை: போராட்டத்துக்கு வலு சேர்க்கும் தென்னிலங்கை தரப்புக்கள் | Urgent Demand Protect Traditional Lands Farmers

அவ்வாறு இருந்தால், பாரம்பரியமாக கால்நடைகளை வளர்த்து வரும் இந்த விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, இந்த நிலங்களை அவர்களுக்கே வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களால் மக்களின் நிலங்களும் விலங்குகளின் வாழ்விடங்களும் அழிக்கப்பட்டு பெரும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன.

அதுபோன்ற ஒரு மோசமான நிலைமை இங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தற்போதைய அரசு இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்காமல் அலட்சியமாக இருப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என மற்றொரு சமூக ஆர்வலர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்த நில விவகாரத்தை அரசு தீர்க்காமல் இழுத்தடிப்பதானது, சாதாரண மக்களுக்கிடையேயான தேவையற்ற மோதலாகவும், இனவாதப் பிரச்சினையாகவும் உருவெடுப்பதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களது உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்த நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தலையிட்டு விவசாயிகளுக்கு நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது” என கூறியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தரவை துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

Next Post

ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு… | Makkal Osai

Next Post
ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு… | Makkal Osai

ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin