• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பால் விலையை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்கிறதா? பெங்களூரு மக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..!! | Karnataka Bus Fare Hike Likely on November 4 After Nandini Milk Price Rise

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பால் விலையை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்கிறதா? பெங்களூரு மக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..!! | Karnataka Bus Fare Hike Likely on November 4 After Nandini Milk Price Rise
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பால் விலையை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்கிறதா? பெங்களூரு மக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..!!

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் ஏராளமான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். தினம் தோறும் வேலை மார்க்கமாக ஆயிரக்கணக்கான மக்கள் ஓசூர், கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருவுக்கு சென்று வருகின்றனர். இதனால் கர்நாடகா அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவும் தமிழ்நாட்டு மக்களையும் பாதிக்கிறது.

கர்நாடக அரசு நேற்று தான் நந்தினி பால் விலையை உயர்த்தி அதிர்ச்சி தந்தது. நந்தினி பால் லிட்டருக்கு 8 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் பேருந்து கட்டணமும் உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் பேருந்து கட்டணங்களை உயர்த்த மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.

பால் விலையை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்கிறதா? பெங்களூரு மக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..!!

பேருந்து கட்டண திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேருந்து இயக்க செலவுகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் வழங்குவது என அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் ‘சக்தி’ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கூடுதல் வருமானம் ஏதுமின்றி அதிகப்படியான இயக்க செலவுகள் ஏற்படுவதால் கழகங்களின் நிதிச்சுமை அதிகரித்துள்ளதாம்.

நிதி சுமையை சமாளிக்க பேருந்து கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் காங்கிரஸ் ஆட்சியில் இது இரண்டாவது கட்டண உயர்வாக இருக்கும் . இதற்கிடையே அதுல் குமார் திவாரி தலைமையிலான கட்டண ஒழுங்குமுறை குழு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் நவம்பர் 3ஆம் தேதி நான்கு போக்குவரத்து கழகங்களின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இறுதி முடிவு நவம்பர் 4ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஏற்கனவே நந்தினி பால் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தி, அது நவம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், தற்போது பேருந்து கட்டணமும் உயர்த்தப்படலாம் என்ற செய்தி பொதுமக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Share This Article

English summary

Karnataka Bus Fare Hike Likely on November 4 After Nandini Milk Price Rise

பால் விலையை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்கிறதா? பெங்களூரு மக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..!! / Karnataka is expected to announce a government bus fare hike on November 4, days after approving an ₹8-per-litre increase in Nandini milk prices from November 1.

Story first published: Friday, October 30, 2026, 10:00 [IST]

Other articles published on Oct 30, 2026

Read More

Previous Post

நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்! | Israeli Youth Turn Their Backs on Netanyahu, But Still No Solution! Election Plunged Into Deep Confusion!

Next Post

ஒரு நியாயமான அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் ஹராம் என்கிறார் இஸ்லாமிய அறிஞர் | Makkal Osai

Next Post
ஒரு நியாயமான அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் ஹராம் என்கிறார் இஸ்லாமிய அறிஞர் | Makkal Osai

ஒரு நியாயமான அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் ஹராம் என்கிறார் இஸ்லாமிய அறிஞர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin