உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நியூயார்க் மைதானம் தொடர்ந்து பவுலர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இன்றைய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வலுவான தென்னாப்பிரிக்க அணியால் 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தின்போது, இந்திய அணியால் 119 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர் போட்டியை பொருத்தளவில் இந்த ஸ்கோர் எளிதானது என்றாலும், இதையும் பாகிஸ்தான் அணியால் சேஸிங் செய்ய முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களம் இறங்கினர்.
டி காக் 18 ரன்னில் வெளியேற, ரீசா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
பின்னர் இணைந்த ஹெய்ன்ரிக் கிளாசன் – டேவிட் மில்லர் இணை பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 5 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி வங்கதேச அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
