• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பெண்கள் கல்விக்குத் தடை: தாலிபான்களுக்கு ஆதரவாகப் பேசி சர்ச்சையில் சிக்கிய ஜாகீர் நாயக்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
பெண்கள் கல்விக்குத் தடை: தாலிபான்களுக்கு ஆதரவாகப் பேசி சர்ச்சையில் சிக்கிய ஜாகீர் நாயக்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 31, 2026 1:43 PM IST

சரியான ஆசிரியர்கள் கிடைக்கும் வரை கல்வியை தாமதப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை என்றும் அவர் தாலிபான் நடவடிக்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

News18
News18

இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவில் தங்கியிருக்கும் இஸ்லாமியப் பிரசாரகர் ஜாகீர் நாயக், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு விதித்துள்ள கல்வித் தடைகளை நியாயப்படுத்திப் பேசியிருப்பது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் பேசிய ஜாகீர் நாயக், “ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மை அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். தாலிபான் அரசாங்க தூதர்களிடம் தான் பேசியதாகக் கூறிய அவர், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி வழக்கம்போல வழங்கப்பட்டு வருகிறது என்றும், உயர் கல்வி மற்றும் இரண்டாம் கட்டக் கல்வி மட்டுமே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான தகுந்த பாதுகாப்புச் சூழல் இல்லாததாலும், பெண் ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுவதாலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை மட்டுமே இக்கட்டுப்பாடுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்றும், சரியான ஆசிரியர்கள் கிடைக்கும் வரை கல்வியை தாமதப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை என்றும் அவர் தாலிபான் நடவடிக்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இவரது இந்த பேச்சுக்கு சர்வதேச அளவில் பலத்த கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயின் தந்தையும், மனித உரிமை ஆர்வலருமான ஜியாவுதீன் யூசுப்சாய், ஜாகீர் நாயக்கின் இந்த பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தாலிபான்கள் பெண்களுக்கு விதித்துள்ள காலவரையற்ற தடையை வெறும் “தாமதம்” என்று நியாயப்படுத்துவதும், பெண் ஆசிரியர்களின் பற்றாக்குறையைக் காரணமாகக் கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜாகீர் நாயக் போன்ற உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிப்பது, தாலிபான்களின் பாலினப் பாகுபாட்டிற்கும் அநீதிக்கும் சமயக் கோட்பாடுகளின் மூலம் தவறான அங்கீகாரத்தை வழங்கிவிடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

8 மாதங்களில் ரூ.120 கோடி வருமானம்: நடிப்பை தாண்டி நடிகை சமந்தாவுக்கு அடித்த ஜாக்பாட்..!! | Samantha Ruth Prabhu’s Secret Alchemist Crosses ₹120 Crore Revenue in 8 Months: A Clean-Perfume Business Success Story

Next Post

மலேசியாவில் Waze செயலியைத் தடை செய்வது நல்ல முடிவா? – Malaysiakini

Next Post

மலேசியாவில் Waze செயலியைத் தடை செய்வது நல்ல முடிவா? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin