• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்..  27 இந்தியர்கள் இருந்த எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்..  27 இந்தியர்கள் இருந்த எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 31, 2026 1:49 PM IST

இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய கப்பல் நிர்வாக நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தீவிர ஆலோசனையையும் தொடர்பையும் மேற்கொண்டு வருகிறது.

News18
News18

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடற்பகுதியில் 27 இந்திய மாலுமிகளுடன் பயணித்த பனாமா நாட்டின் கொடி பொருத்திய ‘எம்.டி லூயிஸ் 1’ (MT LOUISE 1) என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ‘லிம்பெட் மைன்கள்’ (Limpet Mines) மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஓமானின் கசாப் பகுதியிலிருந்து வடகிழக்கே சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேசக் கடல் பாதையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறிய படகில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், டேங்கர் கப்பலின் உடற்பகுதியில் இரண்டு லிம்பெட் மைன் வெடிபொருட்களைப் பொருத்தித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து கப்பலின் என்ஜின் அறையில் பயங்கரத் தீப்பற்றியது. இருப்பினும், கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் விரைவாகவும் சாதுரியமாகவும் செயல்பட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், கப்பலின் செயல்பாட்டை இயல்புநிலைக்குக் கொண்டுவந்து தங்களின் பயணத்தையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதலால் கடலில் எவ்வித எண்ணெய் கசிவோ அல்லது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்போ ஏற்படவில்லை என்றும், கப்பலில் இருந்த 27 இந்திய மாலுமிகளும் எவ்விதக் காயமுமின்றி முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பிரிட்டனின் ‘UKMTO’ கடற்படை அமைப்பு உறுதி செய்துள்ளது.

இச்சம்பவத்திற்கு முந்தைய நாள், 2 இந்தியர்கள் பயணித்த ‘எம்.டி அர்சனா’ (MT ARZANAH) என்ற மற்றொரு கச்சா எண்ணெய் கப்பல் மீதும் இதே ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் ஏவுகணை அல்லது எறிபொருட்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் அடுத்தடுத்து நடக்கும் இந்தத் தாக்குதல்களை இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய கப்பல் நிர்வாக நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தீவிர ஆலோசனையையும் தொடர்பையும் மேற்கொண்டு வருகிறது.

Read More

Previous Post

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்: 2-வது காலாண்டில் நிகர லாபம் 13.7% உயர்வு.. வருவாய் 11.4% அதிகரிப்பு! | வணிகச் செய்திகள்

Next Post

ஜாலான் அம்பாங் ஹோட்டலில் இயங்கி வந்த ‘மினி கேசினோ’ முடக்கம் | Makkal Osai

Next Post
ஜாலான் அம்பாங் ஹோட்டலில் இயங்கி வந்த ‘மினி கேசினோ’ முடக்கம் | Makkal Osai

ஜாலான் அம்பாங் ஹோட்டலில் இயங்கி வந்த ‘மினி கேசினோ’ முடக்கம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin