இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கு யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) பெரும் உதவியாக இருந்து வருகிறது. விரைவான மற்றும் சௌகரியமான UPI ட்ரான்ஸ்ஷாக்ஷன்கள் மூலமாக இ-காமர்ஸ் ஆன்லைன் பில் பேமெண்ட்கள் மற்றும் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் இந்த முன்னேற்றம் பேமெண்ட்களை எளிதாக பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு தொழில்களுக்கு உதவி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பல நாடுகள் UPI அப்ளிகேஷன்கள் மூலமாக பேமெண்ட்களை பெறுவதற்கு ஆரம்பித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யும் பொழுது நீங்கள் பயன்படுத்தும் பிளாட்ஃபார்மின் அடிப்படையில் வழக்கமான வயர் ட்ரான்ஸ்பரை காட்டிலும் UPI ட்ரான்ஷாக்ஷன்கள் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துவதாக அமைகிறது.
பெறுநரின் விரிவான தனிநபர் அக்கவுண்ட் தகவலுக்கான தேவை இதில் கிடையாது. மாறாக பெறுநரின் UPI ID மூலமாக விரைவான மற்றும் மலிவான ட்ரான்ஸாக்ஷன்களை செய்யலாம். நீங்கள் எவ்வளவு தொகை அனுப்புகிறீர்கள் மற்றும் எந்த நாட்டிற்கு அனுப்புகிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்கள் நாட்டுப் பணத்தை அந்த நாட்டு பணமாக மாற்றுவதற்கான கட்டணம் மற்றும் டிரான்ஸ்ஃபர் கட்டணம் வசூலிக்கப்படும். வழக்கமான வயர் டிரான்ஸ்ஃபர் மூலமாக ஆகக்கூடிய செலவை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
தற்போது UPI சேவைகள் பூட்டான், ஓமான், அபுதாபி, நேபாளம், பிரான்ஸ், இலங்கை மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் கிடைக்கிறது.
UPI சர்வதேச பேமெண்ட்களை ஆக்டிவேட் செய்வது எப்படி?
1. PhonePe அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து ஹோம் ஸ்கிரீனுக்கு செல்லவும்.
2. ஸ்கிரீனின் மேல் இடது மூலையில் காணப்படும் உங்களுடைய ப்ரொபைல் படத்தை கிளிக் செய்யுங்கள்.
3. Payment Management பிரிவில் உள்ள UPI International ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
4. சர்வதேச UPI பேமெண்ட்களுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் வங்கி கணக்கிற்கு அருகில் உள்ள activate பட்டனை கிளிக் செய்யவும்.
5. உறுதி செய்வதற்கு உங்களுடைய UPI PIN-ஐ என்டர் செய்து ஆக்டிவேஷன் செயல்முறையை நிறைவு செய்யவும்.
Google Pay மூலமாக சர்வதேச பேமெண்ட்ஸ்களை செய்வது எப்படி?
1. உங்கள் போனில் Google Pay அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும்.
2. அப்ளிகேஷனை திறந்து அதில் உள்ள ‘Scan the QR code’ ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
3. QR கோடை ஸ்கேன் செய்ய உங்கள் போனின் கேமராவை பயன்படுத்தவும்.
4. நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை வெளிநாட்டு பணத்தின் எண்ணிக்கையில் என்டர் செய்யவும்.
5. உங்கள் Google Pay அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கை தேர்வு செய்யுங்கள்.
6. ட்ரான்ஸாக்ஷனை உறுதிப்படுத்த UPI PIN-ஐ என்டர் செய்யவும்.
7. உங்களது ட்ரான்ஷாக்ஷன் விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து பேமெண்டை உறுதி செய்யவும்.
UPI பயன்படுத்தி சர்வதேச ட்ரான்ஸாக்ஷன்களை செய்யும் பொழுது சிங்கிள் ட்ரான்ஸாக்ஷன் தொகை எவ்வளவு என்பது குறித்த விழிப்புணர்வு யூசர்களிடையே இருக்க வேண்டும். தற்போது ஒரு ட்ரான்ஷாக்ஷனுக்கு நீங்கள் 2,00,000 ரூபாய் வரை டிரான்ஸ்ஃபர் செய்யலாம். இந்த தொகைக்கு மேல் டிரான்ஸ்ஃபர் செய்ய நினைக்கும் யூசர் UPIக்கு பதிலாக நேரடி பேங்க் அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபரை தேர்வு செய்ய வேண்டும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
