• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கோழி திருட்டு விவகாரத்தில் கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தியது உயர்நீதிமன்றம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கோழி திருட்டு விவகாரத்தில் கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தியது உயர்நீதிமன்றம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
கோழி திருட்டு விவகாரத்தில் கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தியது உயர்நீதிமன்றம்!

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் 11 கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், தாக்குதல் இடம்பெற்று சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.


கோழி திருடப்பட்டதாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் நபரொருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றத்துக்காக இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த கொலை வழக்கில் தங்காலை மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை, உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ராஜபுரகே சுகத் வீரரத்ன மற்றும் ‘மஹத்தயா’ என்றழைக்கப்படும் ராஜமுனிகே நிஹால் சமிந்த ஆகிய இருவருக்குமே இந்த மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விஜயமுனிகே குணவர்தன என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருந்தனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் பி. அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு,  நேற்று வெள்ளிக்கிழமை (30) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கிராமவாசி ஒருவருக்குச் சொந்தமான கோழியைத் திருடியதாக உயிரிழந்த நபர் மீது சந்தேகம் எழுந்திருந்தது. இதன் காரணமாகச் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை வேளையில், பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டுக்கு அருகில் இருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறிய உயிரிழந்தவரின் தந்தை, நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியமொன்றை வழங்கியிருந்தார்.

அவரது சாட்சியத்தின்படி, முதலாவது குற்றவாளி தனது மகனைக் கத்தியால் குத்தியதாகவும், இரண்டாவது குற்றவாளி அவரைப் பிடித்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் 11 கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், தாக்குதல் இடம்பெற்று சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் முடிவில், குறித்த இருவரும் கொலைக் குற்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு, தங்காலை மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் மேன்முறையீடு செய்திருந்தனர்.

வழக்கின் பிரதான நேரடிச் சாட்சியான உயிரிழந்தவரின் தந்தை வழங்கிய சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், தங்களது தரப்பு வாதங்களை விசாரணை நீதிமன்றம் உரிய முறையில் மதிப்பீடு செய்யவில்லை எனவும் குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

இருப்பினும், வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள், ஏனைய சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் மருத்துவ ஆதாரங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், குறித்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

தீர்ப்பை அறிவித்த நீதியரசர் மேனகா விஜேசுந்தர, உயிரிழந்தவரின் தந்தை வழங்கிய நேரடிச் சாட்சியம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறுக்கு விசாரணையின்போதும் அவர் தனது சாட்சியத்தைத் திருப்திகரமாக நிலைநிறுத்தியிருந்ததாகவும், சம்பவத்தை மிகைப்படுத்திக் கூறியதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை எனவும் நீதிமன்றம் அவதானித்துள்ளது.

அத்துடன், உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட காயங்கள் தொடர்பான மருத்துவ ஆதாரங்களும் அரசுத் தரப்பு முன்வைத்த சம்பவ விவரங்களை உறுதிப்படுத்துவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகள் தொடர்பில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துவதற்குப் பிரதிவாதிகள் தரப்பு தவறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை நிராகரித்த உயர்நீதிமன்றம், தங்காலை மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்மானங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

நீதியரசர் மேனகா விஜேசுந்தர வழங்கிய தீர்ப்புடன் நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் பி. அபேகோன் ஆகியோரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கோழி திருட்டு தொடர்பான தகராறைத் தொடர்ந்து இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

Previous Post

மற்ற செய்திகள்.. – Malaysiakini

Next Post

ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி? உமர் அப்துல்லாவிற்கு எதிராக 24 எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. பரபரப்பு | 24 MLA’s revolt agains Jammu Kashmir CM Omar Abdullah

Next Post
ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி? உமர் அப்துல்லாவிற்கு எதிராக 24 எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. பரபரப்பு | 24 MLA’s revolt agains Jammu Kashmir CM Omar Abdullah

ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி? உமர் அப்துல்லாவிற்கு எதிராக 24 எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. பரபரப்பு | 24 MLA's revolt agains Jammu Kashmir CM Omar Abdullah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin