தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவலின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் காலாண்டு (மூன்று மாத) வட்டி உங்களுக்குக் கிடைக்கும். அந்த வட்டித் தொகை ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் உங்கள் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

