Last Updated:
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சவுரவ் தாஸ் இந்தியரா என விசாரிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு 6 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியா் தானா? என்பது குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியா் தானா? என்பது குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மத்திய அரசு நடத்தும் விசாரணையில் சவுரவ் தாஸ் நேபாளி என தெரிய வந்தால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும்.
நீதித்துறை குறித்தும், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்துகளை எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். எனவே, அவருடைய சமூக வலைதள கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.


