• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டாடா குழும மோதல் : என். சந்திரசேகரன் , நோயல் டாடா நடத்திய ரகசிய சந்திப்பு..!! பிரச்சினை தீர்ந்ததா? | Tata Sons Leadership Crisis: Noel Tata and N Chandrasekaran Hold Secret Talks Amid Chairman Extension Dispute

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டாடா குழும மோதல் : என். சந்திரசேகரன் , நோயல் டாடா நடத்திய ரகசிய சந்திப்பு..!! பிரச்சினை தீர்ந்ததா? | Tata Sons Leadership Crisis: Noel Tata and N Chandrasekaran Hold Secret Talks Amid Chairman Extension Dispute
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாடா குழும மோதல் : என். சந்திரசேகரன் , நோயல் டாடா நடத்திய ரகசிய சந்திப்பு..!! பிரச்சினை தீர்ந்ததா?

டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் பதவி காலத்தை நீடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. என்.சந்திரசேகரன் பதவி நீட்டிப்புக்கு நோயல் டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் சந்திரசேகரன் நீடிப்பாரா என்ற கேள்வி எழுகிறது.

டாடா குழுமத்தில் ரத்தன் டாடா மறைவுக்கு பின் பல அதிகார மோதல்கள் எழுந்துள்ளன. அவை இந்த விவகாரத்தில் தான் முதல்முறையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன. டாடா குழுமத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மோதலை முடிவுக்கு கொண்டு வர நோயல் டாடாவும், என். சந்திரசேகரனும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு இரகசிய சந்திப்பை நிகழ்த்தினர் என மணிகண்ட்ரோல் செய்தி கூறுகிறது. செப்டம்பர் 17-ஆம் தேதி நடந்த டாடா சன்ஸ் வாரிய கூட்டத்திற்கு பிறகு, இவ்விருவரும் நேரில் சந்தித்து பேசியது இதுவே முதல்முறையாகும்.

டாடா குழும மோதல் : என். சந்திரசேகரன் , நோயல் டாடா நடத்திய ரகசிய சந்திப்பு..!! பிரச்சினை தீர்ந்ததா?

டாடா குழுமத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும், எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லையாம், இருப்பினும், எதிர்காலத்திலும் பேச்சுவார்த்தைகளை தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன என அந்த செய்தி கூறுகிறது.

டாடா குழுமத்தின் கொள்கை விதிகளின்படி, சந்திரசேகரன் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என நோயல் டாடா தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ராஜினாமாவை அறிவித்த ஒருவரை மீண்டும் பதவியில் நீட்டிக்க செய்வது ஏன் என நோயல் டாடா கேள்வி எழுப்புகிறார். இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படாவிட்டால், நீதிமன்றம் வரை இந்த விவகாரம் செல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் இருவரையும் சந்திக்க வைத்து பிரச்சினையை தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் சந்திரசேகரன் தனது பதவியை நீட்டிக்க போவதில்லை இந்த பதவி காலம் முடிந்த உடன் தான் ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற டாடா சன்ஸ் வாரிய கூட்டத்தில், என். சந்திரசேகரன் பதவியை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் டாடா சன்ஸ் பங்கு பட்டியலுக்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இந்த முடிவுகளை நோயல் டாடா கடுமையாக எதிர்க்கிறார் ஆனால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தருகின்றனர். இந்த தீர்மானம் குறித்து நோயல் டாடா, டாடா சன்ஸ் நிறுவன செயலாளர் பிரகாஷ் முகோபாத்யாய்க்கு எழுதிய கடிதத்தில், சந்திரசேகரனின் மறுநியமனம் மற்றும் வாரிய முடிவுகள் சட்டவிதிகளுக்கு புறம்பானவை, என கூறி முறையான ஆவணங்கள் மற்றும் கூட்டத்தின் வீடியோ பதிவுகளை கேட்டிருந்தார். இதற்கிடையில் இந்த இருவரின் ரகசிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்த சந்திப்புகளில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

Tata Sons Leadership Crisis: Noel Tata and N Chandrasekaran Hold Secret Talks Amid Chairman Extension Dispute

டாடா சன்ஸ் மோதல் : என். சந்திரசேகரன் , நோயல் டாடா நடத்திய ரகசிய சந்திப்பு..!! தீர்வு கிடைத்ததா? / Tata Sons Chairman N Chandrasekaran and Tata Trusts Chairman Noel Tata reportedly held a private meeting in Mumbai on October 25 to defuse the escalating governance dispute over Chandrasekaran’s reappointment.

Story first published: Friday, October 30, 2026, 14:35 [IST]

Other articles published on Oct 30, 2026

Read More

Previous Post

கும்பகோணத்தில் தொடரும் திருட்டு.. பல்சர் பைக்கை அசால்ட்டாக திருடிய மர்ம நபர்கள்.. சிசிடிவி அதிர்ச்சி | Bike Theft Caught on CCTV in Kumbakonam: Two Mystery Men Steal Pulsar from Outside House

Next Post

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஐ உதவி உபகரணங்கள் வாங்க நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு… | Makkal Osai

Next Post
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஐ உதவி உபகரணங்கள் வாங்க நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு… | Makkal Osai

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஐ உதவி உபகரணங்கள் வாங்க நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin