• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ராகுல் காந்திக்கும், அகிலேஷ் யாதவுக்கும் சவால்விடுகிறேன்” – உ.பி.யில் அமைச்சர் அமித்ஷா பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“ராகுல் காந்திக்கும், அகிலேஷ் யாதவுக்கும் சவால்விடுகிறேன்” – உ.பி.யில் அமைச்சர் அமித்ஷா பேச்சு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 30, 2026 6:44 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.

News18
News18

உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு வரும் 2027ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காகத் தற்போதிலிருந்தே அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி, உத்தரப்பிரதேசத்திலும் கூட்டணியில் இருந்துவருகின்றன.

இந்தக் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுகள் எழுந்துவருகின்றன. இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி குறித்தும் விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை கூட்ட நாங்கள் தயார்” எனத் தெரிவித்து ராகுல் காந்திக்கும், அகிலேஷ் யாதவுக்கும் சவால்விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அமித்ஷா பேசியதாவது; “ஹரியானாவில், அதிக இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமைத்தது. மகாராஷ்டிராவில், அதிக இடங்களைப் பெற்ற கூட்டணியாக (NDA) நாங்கள் ஆட்சியை அமைத்தோம். பீகாரில், முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

டெல்லியில், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமைத்தது. புதுச்சேரியில், மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமைத்தது. அசாமில், 100 இடங்களை வென்று நாங்கள் ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பெற்றோம்; வங்காளத்தில், மம்தாவின் செல்வாக்கை முற்றிலுமாகத் துடைத்தெறிந்தோம். வங்காளத்தில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, தங்களால் தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

#WATCH | Lucknow | Union Home Minister Amit Shah says, “…’Rahul Baba,’ I challenge both you and Akhilesh Yadav right here and now: the Bharatiya Janata Party is fully prepared to discuss this (CEC-SIR row) in Parliament. We have nothing to hide. Let us convene a special session of Parliament—but they have no intention of speaking there. They refuse to let Parliament function; instead, they just create a ruckus”


In Haryana, the Bharatiya Janata Party formed the government after securing the highest number of seats. In Maharashtra, the NDA formed the government with the largest share of seats. In Bihar, for the first time, a Chief Minister from the Bharatiya Janata Party took office. In Delhi, the Bharatiya Janata Party formed the government after three decades. In Puducherry, the Bharatiya Janata Party formed the government once again. In Assam, we achieved a hat-trick by winning 100 seats, and in Bengal, we completely wiped out Mamata Didi. After the events in Bengal, they have realised that they simply cannot win elections. Naturally, when a team loses a match or a game, they should sit down and practice more—that is what is expected, isn’t it? But ‘Rahul Baba’ is cut from a different cloth. The same goes for Akhilesh and others in the ‘INDIA’ alliance who are with him. Instead of accepting defeat, they began accusing the umpire of cheating, claiming that votes were stolen. ‘Rahul Baba,’ I challenge both you and Akhilesh Yadav right here and now: the Bharatiya Janata Party is fully prepared to discuss this in Parliament. We have nothing to hide. Let us convene a special session of Parliament—but they have no intention of speaking there. They refuse to let Parliament function; instead, they just create a ruckus”

— ANI (@ANI) October 30, 2026

இயல்பாகவே, ஒரு அணி போட்டியில் தோற்றுவிட்டால், அவர்கள் மீண்டும் தீவிரமாகப் பயிற்சி பெற வேண்டும் என்பதுதானே எதிர்பார்க்கப்படும் விஷயமாக இருக்கும்? ஆனால், ராகுல் முற்றிலும் வேறானவர். அவருடன் இருக்கும் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியைச் சேர்ந்த அகிலேஷ் மற்றும் பிற தலைவர்களின் நிலையும் இதுதான். தோல்வியை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் நடுவர் ஏமாற்றிவிட்டதாகவும், வாக்குகள் திருடப்பட்டுவிட்டன என்றும் குற்றம் சாட்டத் தொடங்கினர்.

ராகுலுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் நான் இங்கேயே, இப்போதே ஒரு சவால் விடுக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர், சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி குறித்து விவாதிக்கத் தயார். எங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவோம். ஆனால், அங்கு பேசுவதற்கு அவர்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. அவர்கள் நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல், வெறும் கூச்சலையும் குழப்பத்தையுமே உருவாக்குகிறார்கள்” இவ்வாறு பேசினார்.

Read More

Previous Post

மன்னாரில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகத்துக்கு எதிராக முறைப்பாடு

Next Post

நெல் பயிருக்கு பாதுகாப்பு வேண்டுமா.? – விழுப்புரம் விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

Next Post
நெல் பயிருக்கு பாதுகாப்பு வேண்டுமா.? – விழுப்புரம் விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

நெல் பயிருக்கு பாதுகாப்பு வேண்டுமா.? - விழுப்புரம் விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin