பிரபல ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோமார்ட் டிஜிட்டல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் OnePlus நிறுவனத்தின் ஆஃப்லைன் ரீடெயில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பார்ட்னர்ஷிப் நடவடிக்கை இந்தியாவில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் டவுன்களில் வசிக்கும் மக்களுக்கு, OnePlus நிறுவன தயாரிப்புகள் எளிதில் கிடைக்க கூடியதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. ப்ராஃபிட் மார்ஜின்கள் தொடர்பான தீர்க்கப்படாத சிக்கல்கள், கிளெயிம் ப்ராசஸிங்கில் ஏற்படும் தாமதம் போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்வதால் ஒன்பிளஸ் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்த போவதாக பல ரீடெயில் நிறுவனங்கள் எச்சரித்த நிலையில் இந்த புதிய பார்ட்னர்ஷிப் நடவடிக்கையானது வந்துள்ளது. இப்போது இந்த புதிய பார்ட்னர்ஷிப் மூலம், OnePlus நிறுவனத்தின் ஃபோன்கள், வியரபில் டிவைஸ்கள் மற்றும் பிற தயாரிப்புகளை JioMart Digital கடைகளில் இருந்து வாங்கலாம்.
ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோமார்ட் டிஜிட்டல், நாடு முழுவதும் சுமார் 1,00,000-க்கும் மேற்பட்ட ரீடெயில் ஸ்டோர்களின் நெட்ஒர்க்கை கொண்டுள்ளது, சிறிய நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்துகிறது. இந்த பார்ட்னர்ஷிப் குறித்து நம்பிக்கை தெரிவித்து பேசிய ஒன்பிளஸ் நிறுவனத்தின் விற்பனை இயக்குநரான ரஞ்சித் சிங், ஜியோமார்ட் டிஜிட்டல் ஸ்டோர் நெட்வொர்க் முழுவதும் எங்களின் ஒன்பிளஸ் தயாரிப்புகளின் கிடைக்கும் தன்மையை வரம்பை நாங்கள் விரிவுபடுத்தி இருக்கிறோம். இதன் மூலம் எங்கள் நிறுவனத்தின் சாதனங்களை அருகிலுள்ள ரீடெயில் அவுட்லெட்ஸ்களில் எளிதாக வாங்கும் அனுபவத்தை பெறுவதன் மூலம் நுகர்வோர்கள் உண்மையிலேயே மிகுந்த பயனடைவார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.
முன்னதாக கடந்த 1 மாதத்திற்கு முன், ஆர்கனைஸ்ட் ரீடெயிலர்ஸ் அசோசியேஷன் (ORA) மற்றும் ஆல் இந்தியா மொபைல் ரீடெயிலர்ஸ் அசோசியேஷன் (AIMRA) உள்ளிட்டவை தங்களின் ரீடெயில் அவுட்லெட்ஸ் முழுவதும் OnePlus தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்த போவதாக அச்சுறுத்தின. சில்லறை விற்பனையாளர்களுக்கு குறைந்த லாப வரம்புகளை கொடுப்பது, சேவை உரிமைகோரல்களை சரியாக கையாளாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி குற்றசாட்டுகளை முன்வைத்து இந்த மிரட்டலை விடுத்திருந்தன.
இதனை தொடர்ந்து இந்த பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ORA மற்றும் AIMRA சுட்டிகாட்டிய சிக்கல்களைத் தீர்க்க தன் ரீடெயில் பார்ட்னர்ஸ்களுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற போவதாக ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. நீங்கள் OnePlus பிரியராக இருந்தால் புதிய OnePlus ஃபோன் அல்லது டிவைஸ்களை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களின் அருகிலுள்ள ஜியோமார்ட் கடைகளுக்கு சென்று வாங்கி கொள்ளலாம். மேலும் சமீபத்திய இந்த பார்ட்னர்ஷிப் மூலம் இனி OnePlus தயாரிப்புகள் நாட்டின் tier 3 மற்றும் tier 4 நகரங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
