கணினியில் வேலை செய்யும் அனைவருக்குமே ஆபத்து: AI குறித்த உண்மையை போட்டுடைத்த ஸ்ரீதர் வேம்பு..!!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. மனிதர்கள் பல மாதங்களாக எழுதும் கோடிங்கை ஒரே நிமிடத்தில் ஏஐ முடிக்கிறது. நம்முடைய பல்வேறு வேலைகளை எளிமையாக்கி வருகிறது.
ஏஐ வருகையால் பல நன்மைகள் இருந்தால் மனிதர்களின் வேலைவாய்ப்பினை அது பறிக்கிறது. இந்நிலையில் ஏஐ காரணமாக, கணினி சார்ந்த வேலைவாய்ப்புகளில் மிக கடுமையான மற்றும் வலி மிகுந்த மாற்றங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆபத்து உண்மையாகவே நெருங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஸ்ரீதர் வேம்பு, கணினி மூலம் செய்யக்கூடிய எந்தவொரு வேலையும் இப்போது நேரடி ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என கூறியுள்ளார். இதற்கு முன்பு 10 பேர் சேர்ந்து செய்த வேலையை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த ஒரே ஒரு திறமையான நபரால், தனியாக செய்து முடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
Any job performed on the computer has this risk now: one smart person using AI can perform the work of 10 people. The risk is getting ever more real. This does not mean 90% of people working on a computer will have no work at all. Industries that previously could not afford to hire software engineers or digitial marketers could afford them now, for example. What it does mean is a rebalancing across the economy and that is painful when we go through it. The only thing we can do is to accept that it is coming and be prepared for it.
— Sridhar Vembu (@svembu) October 29, 2026“>
இதனால் உடனடியாக 90 சதவீத வேலைகள் காலியாகிவிடும் என அர்த்தமல்ல என்றாலும், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சந்தையிலும் நிறுவனங்களின் கட்டமைப்புகளும் பெரிய அளவில் மாற போகின்றன என அவர் எச்சரித்துள்ளார். இந்த தொழில்நுட்ப மாற்றத்தால் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் ஒரு பெரிய மறுசீரமைப்பு ஏற்படும் என கூறியுள்ளார்.
இந்த மாற்றம் நிகழும் போது, பாரம்பரியமான திறன்களை மட்டுமே நம்பியிருக்கும் பணியாளர்களும் வணிக நிறுவனங்களும் கடுமையான சிரமங்களை சந்திக்க நேரிடும் என கூறும் அவர், இந்த மாற்றம் வரப்போகிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டு, அதற்கு தகுந்தாற்போல நம்மை நாமே முன்பே தயார்படுத்தி கொள்வது மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வழி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாகவே தொழில்நுட்ப புரட்சிகள் ஏற்படும் போதெல்லாம் பழைய தலைமுறையினர் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் தொடக்க காலத்தில் சிரமங்களை எதிர்கொள்வது இயல்பு. ஆனால், இளம் தலைமுறையினர் புதிய ஏஐ கருவிகளை இயல்பாகவே விரைவாக கற்றுக்கொள்வார்கள். இது வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் கண் கூடாகவே பார்க்கிறோம்.
ஏஐ வளர்ச்சி வேலைவாய்ப்புகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இதனால் ஜூனியர் நிலை வேலைகள், திரும்ப திரும்ப ஒரே மாதிரி செய்ய கூடிய வேலைகளில் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தான் ஏஐ உங்களின் வேலைகளை பறிக்காது ஏஐ பற்றி தெரிந்த மனிதர்களே உங்களின் வேலைகளை பறிப்பார்கல் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
