செ.தி.பெருமாள்
வட்டவளை – நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லொனக் பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில், 29 வயதுடைய இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை (29) காலை 9.30 மணியளவில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், ரஞ்சித்குமார் என்பவராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பொலிஸாரும் தடையவியல் பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தடையவியல் பொலிஸார் தமது முதற்கட்டப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், சடலம் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

