சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதன்முறையாக,இந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச டேக்வாண்டோவின் வெற்றியாளருக்கான மெய்நிகர் போட்டியை நடத்த உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கு பெறும் நபர்கள் ஒருவருக்கொருவர் நேரடி தொடர்பில்லாமல் எதிர்தரப்பினரின் உருவ பொம்மையுடன் மோதுவதே டேக்வாண்டோ மெய்நிகர் போட்டி ஆகும்.
புதிய டேக்வாண்டோ மெய்நிகர் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வயது, எடை மற்றும் பாலினம் போன்ற எந்த வரம்புகளும் இல்லை.
இதில் வயது வித்தியாசம் இன்றி யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.

