• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கரையை கடந்தும் ஓயாத அர்னாப் புயல்.. கோர தாண்டவத்தில் ஆந்திராவில் பல ஆயிரம் பேர் பாதிப்பு.! | Cyclone Arnab creates huge damage: 3 Dead in Andhra Pradesh, Thousands Evacuated in Andhra – Odisha

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கரையை கடந்தும் ஓயாத அர்னாப் புயல்.. கோர தாண்டவத்தில் ஆந்திராவில் பல ஆயிரம் பேர் பாதிப்பு.! | Cyclone Arnab creates huge damage: 3 Dead in Andhra Pradesh, Thousands Evacuated in Andhra – Odisha
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Published: Wednesday, October 28, 2026, 16:45 [IST]

அமராவதி: அர்னாப் புயல் கரையை கடந்த பிறகும், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்த நிலையில், 31 வீடுகள் சேதமடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் சுமார் 57,000 பேரும், ஒடிசாவில் 30,000-க்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வங்க கடலில் உருவான அர்னாப் புயல் கடந்த சில நாட்களாகவே ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழையை கொடுத்து வந்தது. இந்த புயல் இன்று கரையை கடக்கும் என வல்லுநர்கள் குறிப்பிட்டனர். அதற்கேற்ப இது வலுவிழக்காமல் புயலாகவே கரையை கடந்தது.

Cyclone Arnab Landfall Cyclone Arnab

அதிவேக காற்று

ஆந்திரப் பிரதேசம் – ஏனாம் கடலோர பகுதியில் இன்று காலை கரையை கடந்த அர்னாப் புயல், அப்போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்றுடன் வீசியது. கரையை கடந்த பிறகே அது வலுவிழக்க தொடங்கியது. அப்போதும் மிக கடுமையான புயலாக இருந்த அர்னாப், கடுமையான புயலாக மட்டுமே வலுவிழந்தது.

புயல் மேலும் வலுவிழந்து சாதாரண புயலாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும் மாறி சத்தீஸ்கர் நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், புயல் கரையை கடந்த பிறகும் கூட மழை நிற்கவில்லை. ஆந்திரா மற்றும் ஒடிசாவின் தெற்குப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆந்திரா

ஆந்திரப் பிரதேசமே புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், வீடுகளும் சேதமடைந்துள்ளன. மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் மரம் விழுந்ததில் 46 வயதான சொக்கா கிஷோர் குமார் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவர் உயிரிழந்தார். அதே பகுதியில் கோயில் அருகே மின்கம்பம் சாய்ந்து மொபெட்டில் சென்ற ராம்பாபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் 53 வயது ஆண், அனகாப்பள்ளி மாவட்டத்தில் வீட்டுக்கு வெளியே கிடந்த மின்கம்பியை மிதித்த 55 வயது பெண் உயிரிழந்தனர். இதன் மூலம் புயல் மூலம் ஏற்பட்ட உயிரிழப்புகள் 3ஆக உயர்ந்தன. ஆந்திராவில் சுமார் 57,000 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனாமில் ஆபத்தான இடத்தில் இருந்து 38 பேர் வெளியேற்றப்பட்டனர்.

ஒடிசா

ஒடிசாவின் தெற்கு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் அனைத்து தெற்கு மாவட்டங்களும் புயலால் பாதிக்கப்படலாம் என்றும் மல்கான்கிரி மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார். மொத்தம் 2,037 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் 313 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ரயில் சேவை பாதிப்பு

புயல் காரணமாக கிழக்கு கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் பாதைகளில் 10 இடங்களில் மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட சிறிய தடைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் புவனேஸ்வர் விமான நிலையத்தில் பெரும்பாலான விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கின. இருப்பினும், புவனேஸ்வர் – ஜெய்பூர் – விசாகப்பட்டினம் வழித்தடத்தில் இயக்கப்படும் விமான சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்தும் ஹைதராபாத்தில் இருந்தும் புவனேஸ்வரத்துக்கு சென்ற விமானங்கள், புயல் தாக்கிய விசாகப்பட்டினம் வான்வெளியை தவிர்க்க ராய்ப்பூர் வழியாக திருப்பிவிடப்பட்டன.

இதற்கிடையே மேற்கு வங்கத்திலும் அக்டோபர் 31ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கொல்கத்தா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், கொல்கத்தா விமான நிலையத்திலும் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary

Cyclone Arnab has caused three deaths and damaged 31 houses in Andhra Pradesh(படுத்தி எடுக்கும் அர்னாப் புயல்): Heavy rain, railway cancellations and flight disruptions have affected several areas even after landfall amid Cyclone Arnab.

Read More

Previous Post

‘கஜ்ஜா’ மற்றும் இரு பிள்ளைகள் படுகொலை: டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பெண்ணுக்கு நவம்பர் 4 வரை விளக்கமறியல்! – Sri Lanka Tamil News

Next Post

“ஒவ்வொரு கிராமமும் உலகத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்ற கனவின் பெயர்தான் ஜியோ..” அனந்த் அம்பானி பேச்சு! | வணிகச் செய்திகள்

Next Post
“ஒவ்வொரு கிராமமும் உலகத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்ற கனவின் பெயர்தான் ஜியோ..” அனந்த் அம்பானி பேச்சு! | வணிகச் செய்திகள்

“ஒவ்வொரு கிராமமும் உலகத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்ற கனவின் பெயர்தான் ஜியோ..” அனந்த் அம்பானி பேச்சு! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin