• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து: குறைந்தது 64 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து: குறைந்தது 64 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
ஐரோப்பா
/
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து: குறைந்தது 64 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் குறைந்தது 64 பேர் உயிரிழப்பு. பல பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் மீட்புப் பணிகள் தீவிரம்; விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.


ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்தில் குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதன்கிழமை (28) இடம்பெற்ற இந்த விபத்தில் பல ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் நூற்றுக்கணக்கான அவசர மருத்துவ வாகனங்கள், சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயில் பாதையின் உயரமான பகுதியில் சில பெட்டிகள் காணப்பட்டதுடன், குறைந்தது மூன்று பெட்டிகள் கீழே சரிந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ரயில் பெட்டிகளின் உலோகப் பகுதிகள், உடைந்த கட்டமைப்புகள் மற்றும் ஏனைய இடிபாடுகள் ரயில் பாதைக்கு கீழேயுள்ள சரிவுப் பகுதியில் சிதறிக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் அருகிலுள்ள வீதிகளின் ஊடாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சில பயணிகள் காயங்களுடன் காணப்பட்டதுடன், அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அருகிலுள்ள நகரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய குடிநீரைத் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விநியோகித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ரயிலொன்றின் பின்புறப் பெட்டியில் சக ஊழியர்களுடன் பயணித்த மிகுவேல் என்ற பயணி, விபத்து இடம்பெற்ற தருணம் குறித்து ஸ்பெயினின் COPE வானொலிக்கு தகவல் வழங்கியுள்ளார்.

திடீரென மிகவும் பலத்த சத்தம் கேட்டதாகவும், ரயில் தடம்புரளப் போவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 10 விநாடிகள் அந்த அதிர்வு நீடித்ததாகவும், ரயிலின் வலதுபுற ஜன்னல் வழியாகச் சேதமடைந்த மற்றுமொரு ரயிலைக் காண முடிந்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.

இதற்கிடையில், விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் ரயில் சேவை நிறுவனமான ரென்ஃபே (Renfe) தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பான ஆரம்பகட்ட தகவல்களின்படி, தனியார் ரயில் சேவை நிறுவனமான இரியோ (Iryo) இயக்கிய ரயில் ஒன்று, சமிக்ஞைக் கோளாறு காரணமாக ரயில்வே உட்கட்டமைப்பு நிர்வாக நிறுவனமான ADIF வழங்கிய அறிவுறுத்தலின்படி டொலிடோவுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் பயணித்த ரென்ஃபே நிறுவனத்தின் ரயில், நிறுத்தப்பட்டிருந்த இரியோ ரயிலுடன் மோதியதாக சம்பவம் தொடர்பில் தகவலறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலின் காரணமாக இரு ரயில்களினதும் பல பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், ரென்ஃபே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது ரயில் பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்ட பின்னரே விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரியோ நிறுவனத்தின் ரயில் எந்தக் காரணத்தினால் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் ரென்ஃபே குறிப்பிட்டுள்ளது.

ரயில்களின் நகர்வு, சமிக்ஞை நிலைமை மற்றும் மோதல் இடம்பெற்ற சூழ்நிலைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் விசாரணைகளின் மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஸ்பெயினில் இந்த ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது பாரிய ரயில் விபத்தாக இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கோர்டோபா மாகாணத்தின் அடமூஸ் பகுதியில் இடம்பெற்ற அதிவேக ரயில் விபத்தில் 46 பேர் உயிரிழந்திருந்தனர்.

அந்த விபத்தைத் தொடர்ந்து ஸ்பெயினின் ரயில்வே பராமரிப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உட்கட்டமைப்புக்கான முதலீடுகள் தொடர்பில் விவாதங்கள் எழுந்திருந்தன.

தற்போதைய விபத்து அந்நாட்டின் ரயில் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

Read More

Previous Post

சுடுகாட்டில் வைத்து மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்.. ஆந்திராவில் பகீர் சம்பவம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளர் மரணம் – Malaysiakini

Next Post

காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளர் மரணம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin